சுஷாந்த் சிங் இந்த மாதிரியான ஆள் - போலீஸ் அதிகரியான மைத்துனர் சந்தேகம்..!


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தற்கொலையே என பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. மேலும் அவர் தூக்கில் தொங்கியதாலேயே மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தோனி குறித்த வாழ்க்கை வரலாற்றில் நடித்த சுஷாந்த் சிங், நேற்று மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதான சுஷாந்த் அவரது குடும்பத்தில் கடைசி பிள்ளையாவார். இவருக்கு 4 சகோதரிகள் உள்ளனர். தாய் உயிருடன் இல்லை, தந்தை மட்டும் இருக்கிறார்.

சுஷாந்தின் மைத்துனர். அதாவது, சுஷாந்த்தின் சகோதரியின் கணவர். இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளும் ஆள் கிடையாது. கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவருடன் யாரவது பத்து நிமிடம் பேசினாலே பத்து வருடம் பழகியவர் போல கேஷுவலாக பேசக்கூடிய ஆள். அவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

சுஷாந்தின் மைத்துனர் ஓ.பி சிங் ஹரியானா மாநில முதல்வர் அலுவலகத்தின் சிறப்பு போலீஸ் அதிகாரியாவார். அவரும் சுஷாந்த் இறப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரியுள்ளார்.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையோ தற்கொலை தான் என கூறுகிறது. எனினும் முழு பிரேத பரிசோதனை அறிக்கை, விசாரணை அறிக்கை வெளிவந்தால் மட்டுமே அவரது இறப்பு தற்கொலையா அல்லது கொலையா என்பது தெரியவரும் என கூறுகிறார்கள்.சுஷாந்த் சிங் இந்த மாதிரியான ஆள் - போலீஸ் அதிகரியான மைத்துனர் சந்தேகம்..! சுஷாந்த் சிங் இந்த மாதிரியான ஆள் - போலீஸ் அதிகரியான மைத்துனர் சந்தேகம்..! Reviewed by Tamizhakam on June 14, 2020 Rating: 5
Powered by Blogger.