ஆத்தாடி..! - கொரோனா பாதித்தவருடன் விருந்து - பீதியில் உறைந்து கிடக்கும் டாப் ஹீரோ., இசை, இயக்குனர்.?


உலகம் முழுதும் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு போய்க்கொண்டிருகின்றது. இதுவரை உலகம் முழுதும் நோய் தோற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் 76 லட்சம். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர், கொரோனா பாதித்தும் அறிகுறி இல்லாமல் இருப்பவர்கள் என பகீர் கிளப்புகிறது ரிப்போர்ட்டுகள்.

அதாவது, உலகத்தில் ஆயிரத்தில் ஒருவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியான தகவலும், அவசியமான தகவலும் கூட. இந்த நோய் தொற்றின் வீரியம் புரியாமல் மக்கள் அசால்டாக இருக்கிறார்கள் என்பது கண் கூட தெரிகின்றது.

நோய் தொற்றை கட்டுப்படுத்த படாத படும் மத்திய, மாநில அரசுகள். எதை எதையோ சொல்லி மக்களை பயமுறுத்தி அரசியல் செய்யும் எதிர்கட்சிகள் என போய்க்கொண்டிருகின்றது.

இந்நிலையில், அந்த டாப் ஹீரோ நடித்த படத்தின் எக்ஸ்க்யூட்டிவ் ப்ரோடியூசருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் அந்த படத்தில் மெல்லிய இசையமைப்பாளர், சமீபத்தில் பிரபல நடிகைரை வெளுத்து வாங்கிய இயக்குனர் மற்றும் உடற்பயிற்சியில் அதீத கவனம் செலுத்தும் வெளிச்சமான வாரிசு நடிகர் ஆகியோர் அந்த தயாரிப்பாளர் வீட்டில் அவரை சந்தித்து விருந்து உண்டு வந்துள்ளார்கள்.

இந்நிலையில், இன்று அந்த தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று என்று தெரிந்ததும் பீதியில் உறைந்து போயுள்ளார்களாம். ஊரடங்கு, தனிமனித இடைவெளி என்று நிமிடத்திற்கு நிமிடம் அரசு கதறிக்கொண்டிருக்கும் போது இப்படியான முன்னணி பிரபலங்களே விருந்து, பார்ட்டி என குதுகலாமாக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று இப்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

இதனால், அந்த மூன்று பேரும் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுதிக்கொண்டிருக்கிறார்களாம். இந்த விஷயம் தான் கோடம்பக்கத்தின் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருகின்றது.

ஆத்தாடி..! - கொரோனா பாதித்தவருடன் விருந்து - பீதியில் உறைந்து கிடக்கும் டாப் ஹீரோ., இசை, இயக்குனர்.? ஆத்தாடி..! - கொரோனா பாதித்தவருடன் விருந்து - பீதியில் உறைந்து கிடக்கும் டாப் ஹீரோ., இசை, இயக்குனர்.? Reviewed by Tamizhakam on June 15, 2020 Rating: 5
Powered by Blogger.