கார் சீட் கவரை ஆடையாய் உடுத்திக்கொண்டு போஸ் கொடுத்துள்ள நடிகை பூஜா குமார்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!


நடிகை பூஜா குமார் ஒரு இந்தோ - அமெரிக்கன் நடிகையாவார். ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள பூஜா குமார், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், விஸ்வருபம் 2, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் பூஜா குமார். இந்நிலையில் தொடர்ந்து கமலுடன் ஜோடியாக பூஜாகுமாரை காண முடிகிறது.

வசனகர்த்தாவும் நடிகருமான கிரேஸி மோகன் மறைவின் போது கூட அவரது இறுதிச்சடங்கில் கமலுடன் ஜோடியாக பங்கேற்றார் பூஜாகுமார். அண்மையில் நடைபெற்ற கமலின் பிறந்த நாள் விழாவில் கூட கமலின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் குடும்பத்தில் ஒருவராக பங்கேற்றார் பூஜா குமார்.

இதனை தொடர்ந்து சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜ்கமல் பிலிம்ஸின் புதிய அலுவலக திறப்பு மற்றும் பாலச்சந்தர் சிலை திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளிலும் நடிகர் கமல்ஹாசனுடன் பூஜாகுமாரும் பங்கேற்றார்.கமலின் வீட்டு விசேஷங்களில் தொடர்ந்து பூஜா குமார் பங்கேற்று வருவதால் அவரும் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பூஜா குமார் கமலுடன் இருக்கும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.ஏற்கனவே கவுதமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் கமல். அவர்கள் இருவரும் சேர்ந்து பாபநாசம் என்ற படத்திலும் நடித்தனர். ஆனால் விஸ்வரூபம் 2 படத்தின் போது ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விட்டனர்.இந்நிலையில், கார் சீட்டுகள் தயாரிக்கும் லெதர் போன்ற துணியால் ஆன ஒரு உடையை அணிந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கார் சீட் கவரை கழட்டி மாட்டிக்கிட்டு இருக்கீங்க என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.


கார் சீட் கவரை ஆடையாய் உடுத்திக்கொண்டு போஸ் கொடுத்துள்ள நடிகை பூஜா குமார்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! கார் சீட் கவரை ஆடையாய் உடுத்திக்கொண்டு போஸ் கொடுத்துள்ள நடிகை பூஜா குமார்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.