இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 01  ஏப்ரல் 2023 சனிக்கிழமை. கோள்களின் ஆதிக்கத்தின் கீழ் நமது செயல்பாடுகள் அமைந்துள்ளது எனவே அந்தந்த கோள்களின் தன்மைக்கு ஏற்றபடி அது நம்மை இயக்குகிறது எனவே நமக்கு என்ன கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறோமோ அந்த கிரகத்தின் பலன் அதிகமாக கிடைக்கும் சில சமயம் சில கிரகங்கள் உச்சமாகவும் சில கிரகங்கள் நீசமாகவும் இருப்பதைக் அமைந்திருப்பதைக் கொண்டு நமக்கு ஏற்படக்கூடிய சுப அசுப பலன்களை அறிந்து கொள்ளலாம் அதற்கு நமது ஜாதக கட்டங்களில் இருக்கக்கூடிய கிரகக்கூறுகளை ஆராய்ந்து நமக்கு தக்க பலனை ஜோதிடர்கள் கூறுவார்கள். அதன்அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள
28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று நீங்கள் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் பொறுமையை அவசியம் கடைபிடிக்க வேண்டும். உணர்ச்சி வசப்படுவதின் மூலம் நீங்கள் எளிதில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். எனவே உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்கவும். இறை வழிபாட்டில் மனதை செலுத்துவதின் மூலம் உங்களுக்கு ஆறுதலும், திருப்தியும் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் உங்களது புத்திசாலித்தனம் வெளிப்பட்டு வெற்றிகள் கிடைக்கும். திட்டமிட்டு ஒழுங்கான முறையில் பணியாற்றுவது உங்களது பணிகளை விரைவில் முடிக்க உதவிகரமாக இருக்கும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணவரவு திருப்திகரமாக இருக்காது. சேமிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. சிறிய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.இதனால் மருத்துவச் செலவு ஏற்படும். எனவே தாயாரின் உடல்நலப் பிரச்சனையில் கவனம் செலுத்துவது அவசியம்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே உங்களது புத்திசாலித்தனத்தால் முன்னேற்றமான பலன்கள் இன்று உங்களுக்கு வந்து சேரும். சுயமான முடிவுகளை எடுத்து முன்னேற்ற பாதையில் நடை போடுவீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் அனைவரையும் கவர்ந்துவிடுவீர்கள்.

--Advertisement--

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணி நிமித்தமாக சின்ன, சின்ன பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கலாம். இந்த பயணத்தின் மூலம் உங்களுக்கு நன்மை மட்டுமே ஏற்படும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை திருப்திகரமான நாள் என்று கூறவேண்டும். கணிசமான தொகை உங்கள் கையில் புரளும் இந்த தொகையை நீங்கள் சேமிக்க கூடிய முயற்சிகள் விடுபடுவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாளாக இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று பொறுமையை இழக்க கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதால் நீங்கள் அமைதி மற்றும் கட்டுப்பாடு இரண்டையும் கடைபிடிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். தியானத்தை மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். எனவே இவை வழிபாட்டில் உங்கள் மனதை செலுத்தவும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். கூடுதல் பணி சுமை காரணமாக உங்களுக்கு அலுப்பு ஏற்படும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் குறைவாக உள்ளது. போதிய சம்பாத்தியத்தால் சிறிய அளவு சேமிப்பு இருப்பதால் அது போதும் என்ற எண்ணத்தில் இருப்பீர்கள். இன்று குடும்பத்திற்காக அதிக பண செலவு செய்ய வேண்டி இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்த வரை நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தை பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

கடகம்

கடக ராசி அன்பர்களே என்று சமூகமான பலன்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல கிடைக்காது. இன்று நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் அதிக அளவு தடைகள் ஏற்படும். இதன் மூலம் உங்களுக்கு அதிருப்பி உண்டாகும். தேவையற்ற விஷயங்களுக்கு கவலைப்படுவதை நீங்கள் தவிர்த்து விடுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை தரமான முறையில் செயல்படுத்த நினைத்தாலும் அது இன்று முடியாத நாளாக உள்ளது. மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எனவே பணியில் கவனத்தை செலுத்துவது அவசியம்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணவரவு குறைவாகவே காணப்படும். பண இழப்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணத்தின் போது கவனத்தோடு பயணத்தை மேற்கொள்வது அவசியம். இல்லை என்றால் பண இழப்பு ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள். சளியினால் தொல்லை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிக அளவு உள்ளதால் ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள்.உங்களிடம்பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். பதட்டத்தை தவிர்த்து விடுங்கள். பதட்டத்தை தவிர்ப்பதற்கு இறைவழிபாட்டை நீங்கள் மேற்கொள்வது அவசியம். உங்கள் இலக்குகளை அடைவது மிகவும் கடினமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை கூடுதல் பொறுப்புக்கள் காணப்படும். இதனால் உங்களுக்கும் மேலும் பதட்டம் அதிகரிக்கும். உங்கள் பணிகளை விரைவில் முடிக்க முடியாமல் நிலுவையில் வைப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு குறைவாக இருக்கும். பண இழப்புக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் பணத்தை கவனமான முறையில் கையாளவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருக்க  நீங்கள் தண்ணீரை அதிகளவு பருகுங்கள். தலைவலி மற்றும் சில அசௌகரியங்கள் உங்களுக்கு ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தை கவனத்தை செலுத்தவும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே என்று நீங்கள் உங்களது ஆற்றலை உணர்ந்து கொள்ளக்கூடிய நாளாக உள்ளது. நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குகளை அடைவதற்கு முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெறுவீர்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்கக்கூடிய ஆற்றல் உங்களிடம் உள்ளது.

மேலும் தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கடினமான உழைப்பின் மூலம் உங்கள் பணிகளை விரைவாக முடித்து, எளிதாக எதையும் செய்யக்கூடிய ஆற்றல் உங்களுக்கு ஏற்படும். உங்கள் திறமை வெளிப்படுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை போதிய அளவை விட அதிக அளவு பணம் உங்களிடம் அதிகரித்து காணப்படும். பணத்தை பலனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களிடம் ஆற்றல் அதிகரித்து காணப்படுவதால் இன்று ஆரோக்கியத்தில் எந்த விதமான சுணக்கமும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மிக நல்ல வாய்ப்புகள் வந்து கிடைக்கும். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி நீங்கள் நல்ல நிலைக்கு வருவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் திறமையைப் பார்த்து மேலதிகாரிகள் வியப்போடு, பாராட்டவும் செய்வார்கள். உங்கள் பணியை குறித்த நேரத்தில் முடிப்பதன் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை திருப்திகரமான நாளாக உள்ளது. பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வதோடு உங்களது பணத்தை  சேமிக்க கூடிய எண்ணம் மேலோங்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறப்பான ஆரோக்கியம் இருப்பதால் உங்களிடம் மன தைரியம் அதிகரித்து காணப்படும். எனவே ஆரோக்கியத்தில் எந்த விதமான அச்சமும் இல்லை.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்றைய நாள் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் நீங்கள் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த நீங்கள் தியானம் மேற்கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணிகளை கையாளுவது கடினமாக இருக்கும். பணி சுமை அதிகரித்து இருப்பதால் கவனம் தேவை. கவனம் இல்லாமல் நீங்கள் பணியாற்றும் போது தவறுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

 நிதி நிலையை பொறுத்தவரை பணத்தை முறையாக பயன்படுத்த முடியாது. நீங்கள் வைத்திருக்கும் பணம் விரைவில் கரையும். இது உங்களுக்கு கவலையை தரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பதட்டத்தின் காரணமாக நரம்புத் தளர்ச்சிக்கு ஆளாக நேரிடலாம். எனவே பிரார்த்தனைகளின் மூலம் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று நீங்கள் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அப்படி இருக்க முடியாது. உங்கள் மனதில் சஞ்சலங்கள் அடிக்கடி ஏற்படும். அமைதியாக இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் பணிகளை திறமையாக செயல்படுத்த முடியாத நிலையில் நீங்கள் சக பணியாளர்களோடு அனுசரித்துப் போக வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு போதிய அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்காது.மேலும் மேலதிகாரிகளின் கோபத்திற்கும் உள்ளாவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு உங்களுக்கு திருப்திகரமாக இருக்காது. பணம் உங்களிடம் இருந்தாலும் அதை தக்க வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கும். எனவே நிதியை பொருத்தவரை அக்கறை செலுத்துவது அவசியம்.

இன்று ஆரோக்கியமும் சிறப்பாக இல்லை. உங்கள் தோள்களில் வலி மற்றும் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று உங்கள் தகவல் பரிமாற்ற திறமையின் காரணமாக வெற்றிகள் அதிகம் கிடைக்கும். இறை மந்திரங்களை ஜெபித்து நீங்கள் இறை அருளை பெறுவீர்கள். நல்ல வளர்ச்சியை அடையக்கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்கள் கடினமாக உழைப்பைப் பார்த்து மேலதிகாரிகள் வியப்பார்கள். பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடித்து விடுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை திருப்திகரமான நாள் என்று கூறலாம். ஆன்மீகத்திற்காக பணத்தை நீங்கள் செலவு செய்ய நேரிடும். அதன் மூலம் உங்களுக்கு மன மகிழ்ச்சியும் கிடைக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை என்று துடிப்புடன் இருக்கும் உங்களுக்கு ஆரோக்கியத்தை எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது. ஆற்றலோடு அனைத்தையும் செய்து முடித்தீர்கள் எனது ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே எதிர்காலம் பற்றிய எண்ணங்களும் கனவுகளும் உங்கள் மனதில் மேலோங்கி இருக்கும்.இது அனைவரிடமும் காணப்படக்கூடிய எண்ணம் என்பதால் நீங்களும் இது போன்ற எண்ணங்களுக்காக முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் சிறந்த வளர்ச்சி உள்ளது. உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். பணிகளை குறித்த காலத்தில் முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிகமாக இருக்கும். உங்கள் பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய அளவு பணப்புழக்கம் இருப்பதால் நீங்கள் அதை சேமிக்க கூடிய முயற்சிகளும் ஈடுபடுவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறப்பாக இருப்பதால் நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்று உங்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்த முயற்சி செய்வீர்கள். கூடுதல் பொறுப்புகளோடு இருக்கும் நீங்கள் எதிலும் வெற்றியை எதிர்பார்க்கலாம்.எனினும் அந்த வெற்றி சற்று தாமதமாக உங்களுக்கு வந்து சேரும்.

 நிதி தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை வேலையை விட்டு வேறு வேலைக்கு போகக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். இது உங்களுக்கு திருப்தி அளிப்பதோடு ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தித் தரும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் அதிகரித்து இருப்பதால் அதை ஒரு சுமையாக உணர்வீர்கள். பணத்தை திட்டமிட்டு தேவைகளுக்கு ஏற்ப பணத்தை ஒதுக்கி செலவிடுவதை நீங்கள் செய்ய வேண்டும். குறிப்பாக வீண் செலவுகளை தவிப்பது நல்லது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பல் வலி மற்றும் கண் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தோடு இருக்கவும்.