16 வருஷ உழைப்பு என்ன ஆச்சு..? உக்கார முடியல..! மிரட்டி எடுக்கும் மலையாள சினிமா.. ஆடு ஜீவிதம் ..!

16 வருஷ உழைப்பு என்ன ஆச்சு..? உக்கார முடியல..! மிரட்டி எடுக்கும் மலையாள சினிமா.. ஆடு ஜீவிதம் ..!

இந்திய சினிமாக்களில் இப்போது மலையாள படங்கள்தான் முன்னிலை பெற்று வருகின்றன என்பதை கடந்த 3 மாதங்களாக கோலிவுட் வட்டாரத்திலேயே மிக தெளிவாக காண முடிகிறது. அதாவது தமிழ் சினிமாவில் கடந்த 3 மாதங்களில் 60க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வந்துவிட்டன. ஆனால் இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு படம் கூட மாஸ் ஹிட் படமாக இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் உட்பட.

ஆடுஜீவிதம்

ஆனால் மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மெல்ஸ் பாய்ஸ் மிகப் பெரிய வெற்றியை, வரவேற்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது. 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்திருக்கிறது.

அதே போல் அடுத்து வெளியான பிரேமலு, பிரம்மயுகம் போன்ற மலையாள படங்களும், தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் படங்களாக இருந்திருக்கின்றன.

அந்த வரிசையில் இப்போது நடிகர் பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் என்ற படம், மீண்டும் ஒரு சாதனை படமாக, மலையாள திரையுலகில் குறிப்பிட்டுச் சொல்லும் அடையாளமாக, மற்றொரு சிறந்த படைப்பாக வெளிவந்திருக்கிறது.

மிகப்பெரிய வரவேற்பு

இதுகுறித்து சமீபத்தில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு வீடியோவில் கூறியதாவது, மலையாள திரையுலகை பான் இந்தியா இன்டஸ்ட்ரியாக மாற்றும் முயற்சியாக, மிகச்சிறந்த படங்கள் தொடர்ந்து மலையாளத்தில் வந்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ஆடுஜீவிதம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற, சிறந்த படமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்: காதல் கொண்டேன் படத்தில் நடித்த நடிகரின் தற்போதைய பரிதாப நிலை

இன்னொரு கமல்ஹாசனாக…

இந்த படத்துக்காக 16 ஆண்டுகள் உழைத்திருக்கின்றனர் என்பது படத்தில் தெரிகிறது. ஆனால் மிக அற்புதமான படைப்பு இது. இந்த படத்துக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். ஆஸ்கார் அவார்டுக்கு செல்ல தகுதியான படம். குறிப்பாக பிருத்விராஜ், இன்னொரு கமல்ஹாசனாக இந்த படத்தில் தன்னை நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், பகத் பாசில் போன்றவர்கள் சிறந்த நடிகர்களாக இருந்தாலும், நடித்த படத்துக்கு சம்பளம் வாங்கி விட்டு அடுத்த படத்துக்கு போய் விடுவர். ஆனால் தன் படத்தை தூக்கிக்கொண்டு பிரமோவுக்காக எங்கு வேண்டுமானாலும் செல்லும் ஒரு சிறந்த நடிகர் பிருத்விராஜ்.

ஏஆர் ரகுமானின் இசை

படத்தின் நீளம் 3 மணி நேரம் அதிகமாக கூறப்பட்டாலும், இந்த படத்துக்கு இந்த கதைக்கு இவ்வளவு நீளம் அவசியமானதுதான். இதில் எதுவும் மிகையாக சொல்லப்படவில்லை. அதிரடி திருப்பங்களோ, விறுவிறுப்பான காட்சிகளோ இல்லாத மிக மிக யதார்த்தமான படம் இது. இதில் ஏஆர் ரகுமானின் இசை வேற லெவலில் இருக்கிறது.

கடந்த 1990களில் அரபு நாடுகளுக்கு அதிக சம்பளத்தில் வேலைக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு போவார்கள். 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். அல்லது படிக்காதவராக இருந்தாலும் பரவாயில்லை. திரும்பி வரும்போது கோடீஸ்வரராக வரலாம் என்று விளம்பரங்களை வெளியிடுவார்கள். கல்ப் நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ஏஜண்டுகளும் அப்போது இருந்தார்கள்.

இதையும் படியுங்கள்: இதனால் தான் சினிமாவில் இருந்து விலகிட்டேன்.. ரகசியம் உடைத்த நடிகை சுகன்யா..!

கொத்தடிமையாக மாறி…

அப்படி கேரளாவில் இருந்து, தன் குடும்ப வறுமையை போக்க சவுதி அரேபியா செல்லும் பிருத்விராஜ் அங்கு கொத்தடிமையாக மாறி ஒட்டகம் மேய்ப்பதும், ஆடு மேய்ப்பதும்தான் இந்த கதை. அந்த கேரக்டரில் பிருத்விராஜ் வாழ்ந்திருக்கிறார்.

இதுபோன்ற மலையாள படங்களால் பான் இந்தியா படங்களை உருவாக்கும் தலமாக, கேரளா மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

உக்கார முடியல…

16 வருஷ உழைப்புக்கான ரிசல்ட் திரையில் தெரிகிறது. உக்கார முடியல என்று கூறும் அளவுக்கு, அந்த பாலைவன காட்சிகள் மிரட்டி எடுக்கின்றன. மலையாள சினிமாவில் ஆடு ஜீவிதம் நிறைய விருதுகளை கண்டிப்பாக வெல்லும் என்று அந்த வீடியோவில் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.