காதல் கொண்டேன் படத்தில் நடித்த நடிகரின் தற்போதைய பரிதாப நிலை

காதல் கொண்டேன் படத்தில் நடித்த நடிகரின் தற்போதைய பரிதாப நிலை

மிகப் பெரிய நடிகர்களே ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லை என்றால் வறுமையில் விழுந்து விடுகின்றனர். அப்படித்தான் 20 ஆண்டுகளுக்கு முன் நடித்த நடிகருக்கும் ஏற்பட்டு விட்டதா, என்று சமீபத்திய அவரது புகைப்படங்கள் பதைபதைப்பை ஏற்படுத்தி விட்டன.

காதல் கொண்டேன்

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் – சோனியா அகர்வால் நடித்த படம் காதல் கொண்டேன். மிகப் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம், இப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய படமாக இருக்கிறது. ஏனெனில் 1993ல் வெளிவந்த இந்த படம் அப்போதே, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற படம்.

சுதீப் சாரங்கி

இந்த படத்தில் சோனியா அகர்வாலின் காதலனாக ஆதி என்ற கேரக்டரில் நடித்தவர் சுதீப் சாரங்கி. அவரது தற்போதைய புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. காதல் கொண்டேன் படத்தில் நடித்தவரா இவரு, ஏன் இப்படி ஆயிட்டாரு என பலரும் கேள்வி கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

காதல் கொண்டேன் படத்திலும், அதைத்தொடர்ந்து என்னவோ புடிச்சிருக்கு படத்திலும், காதலே ஜெயம் என்ற படத்திலும் சுதீப் சாரங்கி நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

அதற்கு பிறகு தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் இந்தி சீரியல்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். நிறைய இந்தி சீரியல்களில் நடித்து அங்கு அவர் பிரபலமானார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு…

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் இவரை பற்றிய பேச்சும், கவனமும் திரும்பியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் வைரலான அவரது இந்த புகைப்படங்கள்தான். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில்தான், அவர் இப்படி ஆகி விட்டார் என பலரும் பேசத் துவங்கி விட்டனர்.

இதையும் படியுங்கள்: திருமணமே செய்யாமல் வாழும் நடிகை நக்மா.. கட்டம் கட்டி சீரழித்த பிரபலங்களின் ரகசியம்..!

ஆனால் உண்மையில் இது ஒரு விளம்பர படத்துக்காக நடந்த படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான். டாக்ஸி டிரைவராக அவர் நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட ஸ்டில்தான் அந்த படங்கள். மற்றபடி அவர் அந்த விளம்பரத்தில் நடிக்கும் வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்த பலரும், நீங்கதானே காதல் கொண்டேன் படத்தில் நடித்த நடிகர் என கேட்டு அவருக்கு மெசேஜ் செய்திருக்கின்றனர். அதற்கு அவரும் பதில் சொல்லியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நடிகை மீனா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

மேலும், காதல் கொண்டேன் படத்தில் இருந்து தனுஷூம், சுதீப் சாரங்கியும் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்ததற்கு நன்றி தெரிவித்த அவர், இந்த புகைப்படத்தை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

காதல் கொண்டேன் தான் நான் அறிமுகமான முதல் படம். லவ் யூ டு ஆல், தமிழ் சினிமாவுக்கு எப்போதும் நன்றியாக இருப்பேன் என்று அவர் எமோஷனலாக கூறியிருக்கிறார்.

 

விளம்பர படம்தான்

இதன்மூலம் அவர் டாக்ஸி டிரைவர் போல, வறுமையான தோற்றத்தில் காணப்படுவது விளம்பர படம்தான். மற்றபடி அவர் நன்றாக இருக்கிறார். பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். மீண்டும் தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் நடிக்கவும் தயாராக இருக்கிறார்.

மற்றபடி காதல் கொண்டேன் படத்தில் நடித்த நடிகர் சுதீப் சாரங்கியின் தற்போதைய பரிதாப நிலையில் உள்ள அந்த புகைப்படம், விளம்பர படக் காட்சிதான் என்பது உறுதியாகி விட்டது.