தளபதி63 படத்தில் விஜய்யின் பெயரில் இருக்கும் "மாஸ்" - இணையத்தில் கசிந்த தகவல்


தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

ஆனால், தினமும் ரசிகர்கள் கூட்டம் அலை மோத, தற்போது படப்பிடிப்பு ஆந்திரா பக்கம் மாறியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் "மாஸ்டர் மைக்கேல்" என்று ஒரு தகவல் கசிந்துள்ளது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், இவை விஜய் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.
Previous Post Next Post
--Advertisement--