“கணவன் சடலத்துடன் உல்லாசம்” 19 நாட்கள்! “குவியல் குவியலாக ஆணுறை..” விசாரணையில் வெளியான காது கூசும் கொடூரம்..

தும்கூர்: கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் ஹெப்பூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது பரமேஷ் என்பவரை அவரது இரண்டாவது மனைவி ஆஷா கள்ளக்காதலனுக்காகக் கொலை செய்து சடலத்துக்கு அருகிலேயே உல்லாசமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு 20 நாட்களில் கள்ளக்காதலனைத் திருமணம் செய்துகொண்ட ஆஷா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரமேஷ் முன்பு கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். ஏற்கெனவே ஒரு திருமணம் முடிவுக்கு வந்த நிலையில், அவரது காரில் பயணியாக வந்த ஆஷாவுடன் பழக்கம் ஏற்பட்டது. 

ஆஷாவும் முன்பு திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இருவரும் நெருங்கிப் பழகி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இரு வீட்டாரும் எதிர்த்த நிலையில், தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர்.

ஆஷா கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தொடக்கத்தில் கணவரிடம் அன்பாக இருந்த அவர், சில ஆண்டுகளாகத் தேவையற்ற காரணங்களுக்காக சண்டை போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பரமேஷ் ஆஷா மீதிருந்த காதலால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு குடும்பம் நடத்தினார். ஆனால் ஆஷா அவரிடம் வெறுப்பு காட்டியதால், பரமேஷ் சந்தேகம் அடைந்தார்.

அவரது நடவடிக்கைகளை கண்காணித்தபோது, ஆஷா தன்னுடன் பணியாற்றும் ஒரு நபருடன் திருமணத்துக்கு மீறிய உறவில் இருப்பது தெரியவந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்ததும் வெளியானது. ஆத்திரமடைந்த பரமேஷ் இருவரையும் கண்டித்தார். இதனால் ஆஷா கோபமடைந்தார்.

கடந்த ஜனவரி 31-ம் தேதி வேலை முடித்து வீட்டுக்கு வந்த பரமேஷை ஆஷா கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். கணவரின் சடலம் அருகிலேயே இருந்தபோது, அவரது கள்ளக்காதலனுடன் விடிய விடிய உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மறுநாள் கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்து, இறுதி சடங்குகளை நடத்தி உடலை அடக்கம் செய்தார்.

இறப்புக்குப் பிறகு 19 நாட்கள் மட்டுமே கடந்த நிலையில் ஆஷா தனது கள்ளக்காதலனைத் திருமணம் செய்துகொண்டார். இந்த விஷயம் பரமேஷின் தங்கைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஆஷாவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் ஆஷா கள்ளக்காதலனுக்காக கணவரைக் கொலை செய்தது உறுதியானது.

மேலும், அவரது வீட்டின் அருகே பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் குவியல் குவியலாக கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து,தும்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கு கள்ளக்காதல் மட்டும் தான் காரணமா..? அல்லது வேறு ஏதேனும் நோக்கம் உள்ளதா என்ற தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary : In Tumakuru district's Heppur, 50-year-old Paramesh, who remarried Asha after both had prior divorces, lived together for about ten years despite family opposition. Over time, Asha developed a close relationship with a colleague. Following Paramesh's death on January 31, Asha remarried that colleague within twenty days. Paramesh's sister raised doubts, leading to police inquiry.