லிப்-லாக் முத்தத்திற்கு நோ சொன்ன தமன்னாவா இது..? - ஷாக்கிங் தகவல்


முத்தக் காட்சிகள் மற்றும் நீச்சலுடைக் காட்சிகளில் நடிக்கும் விஷயத்தில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார் தமன்னா. 

தமன்னா கவர்ச்சிக் காட்சிகளில் தாராளமாக நடிக்கிறார் என்றும், நீச்சல் உடைக்கும் ஓகே சொல்லிவிட்டார் என்றும் சமீபத்தில் வெளியான செய்தியை கூட அவர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "சினிமாவில் நடிக்க வரும்போதே இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தேன். அதாவது உதட்டோடு உதடு வைத்து முத்த காட்சியில் நடிக்க கூடாது. நீச்சல் உடையிலும் நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருந்தேன். இன்று வரை அதைக் கடைபிடித்து வருகிறேன்.நிறைய தயாரிப்பாளர்களும், இக்குநர்களும் கதைக்கு முத்த காட்சி, நீச்சல் உடை தேவை என்றும் அதில் நடிக்க வேண்டும் என்றும் என்னிடம் வற்புறுத்தினர். அதனை நான் ஏற்கவில்லை. முத்தம், நீச்சல் உடையில் நடிப்பதற்கு ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

இப்படி கூறிய இவர், தற்போது மார்க்கெட் இல்லாததால் தனது கொள்கையை முழுவதுமாக ஒதுக்கி வைத்துவிட்டார் போலும். கமிட்டாகும் படங்களில் எல்லாம் ஏகத்துக்கும் கவர்ச்சியை வாரி வீசுகிறார். தற்போது, நடித்து வரும் ஹிந்தி படமொன்றில் பிகினி மற்றும் லிப்லாக் முத்தக் காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள்.

இதனை கேட்ட பல இயக்குனர்கள், முத்த காட்சிக்கு நோ சொன்ன தமன்னா-வா இது என்று ஷாக் ஆகித்தான்கிடக்கிறார்களாம்.