அஜித்தின் உயிர் ரசிகர்கள் - நாளை செய்யவுள்ள செயல் - கண்டிப்பாக பாராட்டாமல் இருக்க முடியாது..!


அஜித் தன் ரசிகர்களின் மீது மிகவும் அக்கறை கொண்டவர். அவர்கள் தவறான பாதைகளில் சென்று விடக்கூடாது என்பதற்காக தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் குடும்பத்தை கவனியுங்கள் என கூறியவர்.

அண்மையில் அவரின் ரசிகர்களான சிலர் BJP யில் இணைந்ததாக வந்த செய்தியை அடுத்து தனக்கு அரசியல் ஆசை இல்லை. அதிகபட்சமே வரிசையில் நின்று ஓட்டு போட வேண்டும் என்பதே என் எண்ணம். ரசிகர்கள் படிப்பு, வேலையை கவனிக்க வேண்டும் என கூறினார்.

அதே வேளையில் அவரின் ரசிகர்கள் அவர் போலவே மற்றவர்களுக்கு உதவும் கொள்கையை கடைபிடித்து வருகிறார்கள். இந்நிலையில் சங்கரன்கோவில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கண் மருத்துவ முகாம் வசதிகளை அப்பகுதி மக்களுக்கு செய்து கொடுத்துள்ளனர்.

நாளை ஞாயிறு அன்று இம்முகாம் நடைபெறவுள்ளது.