விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. AGS
நிறுவனம் விஜய்யை வைத்து முதன்முதலாக தயாரிக்கும் இப்படம் படு
பிரம்மாண்டமாக இருக்கும் என்கின்றனர்.
சுற்றி சுற்றி விஜய்
படப்பிடிப்பு சென்னையிலேயே நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பிற்கு
இடைவேளை விட்டிருப்பதாகவும் ஏப்ரலில் தொடங்க இருப்பதாக தெரிகிறது.
இப்படத்தில் ஞானசம்பந்தம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என ஏற்கெனவே தகவல் வந்துவிட்டது.
சமீபத்தில்
ஒரு கல்லூரி விழாவில் விஜய் 63 படத்தில் நடித்து வருவதாகவும்,
நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்கிறேன் என்று அவர் கூற அந்த அரங்கமே
இளைஞர்களின் சத்தத்தால் அதிர்ந்தது.


