கற்றது தமிழ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அஞ்சலி, தமிழ் சினிமாவின்
முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில்
வெளியான பேரன்பு திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகை
அஞ்சலியின் திருமணம் மற்றும் காதல் குறித்து அவ்வப்போது செய்திகள் உலா
வருவது வழக்கம். நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக நீண்ட காலமாக ஒரு
செய்தி உலாவுகிறது.
இந்நிலையில், தான் யாரையும் காதலிக்கவில்லை
என்று அஞ்சலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னை
சினிமாவில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக சிலர்
முயற்சி செய்து வருகின்றனர். நான் காதலிப்பது போலவும், திருமணம் செய்து
கொள்வது போலவும் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
நான் யாரையும்
காதலிக்கவில்லை. சினிமாவைத்தான் நான் காதலிக்கிறேன். நடிகைகள் காதலிப்பது,
திருமணம் செய்துகொள்வது எல்லாம் சகஜம் தான்.ஆனால், நான் திருமணம்
செய்து கொண்ட பிறகும், நான் தொடர்ந்து நடிக்க செய்வேன் என தில்லாக கூறியுள்ளார். எனது சினிமா பயணத்திற்கு
திருமணம் ஒரு தடையாக இருக்காது எனவும் அவர் கூறினார்.
Tags
Cinema