நீச்சல் குளத்தில் காதலனை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த திரிஷா..! - வெளியான புகைப்படங்கள் - வெடித்த சர்ச்சை


நடிகை த்ரிஷா தற்போது துபாயில் உள்ள ரிசார்ட் ஒன்றில் எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

இந்த புகைப்படங்களுக்கு அவர் கண்டதும் காதல் என்பதை நான் நம்புகிறேன் என்றும் டால்பின்களை நான் விரும்புகிறேன் என்றும் தலைப்பிட்டிருந்தார். மேலும், அவற்றிக்கு முத்தம் கொடுப்பது, இறுக்கமாக கட்டிப்பிடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் த்ரிஷாவை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளன. 

த்ரிஷாவின் புகைப்படங்களை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் கோபம் அடைந்துள்ளனர். பீட்டா விளம்பர தூதுவராக இருந்துகொண்டு டால்பினை கொடுமைப்படுத்தியுள்ளார் த்ரிஷா என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். டால்பின்களை நீச்சல் குளத்தில் அடைத்துவைத்து மனிதர்களுடன் விளையாடச் செய்வது அவற்றைத் தொந்தரவு செய்வது என்றும், பணக்காரர்களின் விளையாட்டுக்கு டால்பின்கள்தான் கிடைத்ததா? என்றும் கேள்வி எழுப்பிய விலங்குகள் நல ஆர்வலர்கள். 


பணக்காரர்களை மகிழ்விப்பது டால்ஃபினின் வேலை அல்ல என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பத்மஜா, ``மனிதர்களுடன் விளையாடுவது டால்பின்களின் வேலை இல்லை. விளையாட அவை ஒன்றும் பொம்மை அல்ல. டால்பின்களைச் சித்ரவதை செய்து தான் தாங்கள் சொல்லியபடி எல்லாம் கேட்க வைக்கிறார்கள்'' என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.