நேர்கொண்ட பார்வை ரிலீஸ் - ஒரு கொண்டாட்டம் என்றால் ஓ.கே..! - வரிசையாக இத்தனையா..?

 
அஜித் ரசிகர்களின் பல்ஸ் நேற்றிலிருந்து உற்சாகத்தில் கூடுதலாகிவிட்டது என சொல்லலாம். அவர் இப்போது நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் வரும் ஆகஸ்ட் 10 என உறுதியாகிவிட்டது.
 
இந்த தகவலை அவரின் மேனேஜர் சுரேஸ் சந்திரா நேற்று டிவிட்டரில் கூறினார். அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்க படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
\
வியாழக்கிழமை செண்டிமெண்ட் பார்க்கும் அஜித் படக்குழு ஏன் இப்படத்தை சனிக்கிழமை ரிலீஸ் செய்துள்ளார்கள் என ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் அஜித்தின் வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்கள் இதே போல 10 ம் தேதி வெளியானது. இதெல்லாம் வரும் ஆகஸ்ட் மாதம் அஜித்திற்கு மேலும் மூன்று சிறப்புகள் இருக்கிறதாம்.
 
அவை என்னென்ன என பார்க்கலாம்.
 
Aug 03 - அஜித்தின் 27 ம் ஆண்டு சினிமா பயணம் #27YrsOfAjithism
Aug 10 - நேர்கொண்ட பார்வை ரிலீஸ் #NKPJudgement
Aug 24 - விவேகம் 2ம் வருட கொண்டாட்டம் #2YrsOfVivegam
Aug 31 - மங்காத்தா 8 ம் ஆண்டு கொண்டாட்டம் #8YrsOfMankatha