காஜல் அகர்வாலுக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும் என பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு ஏற்ப தனக்கான ஓய்வு நாட்களில் ஒவ்வொறு நாடுகளுக்கும் சென்று தான்
அனுபவித்த சுவாரஸ்யங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார்.
அப்படி சமீபத்தில் காஜல் அகர்வால் ஸ்பெயின் நாட்டின் வில்லஜாயோசாவிற்குச் சென்றுள்ளார்.அங்கு தான் அனுபவித்த மறக்க முடியாத தருணங்களை புகைப்படங்களாக பகிர்ந்துள்ளார். அதுமட்டுமன்றி அங்கிருக்கும் இயற்கைக் காட்சிகளை அழகிய பூமி, படர்ந்த வானம் நீள் நிற கடல்
நடுவே நான் என ஒரு அற்புதப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
மற்றொரு புகைப்படத்தில் சிரிப்பை உங்கள் இதயத்திலிருந்து வெளிப்படுத்துங்கள் என கூறியிருக்கிறார். இப்படி ஒவ்வொறு புகைப்படங்களிலும் தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தியிருக்கிறார் காஜல் அகர்வால்.
மேலும், என் வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சி என்றால் அது இயற்கையை ரசித்து அனுபவிப்பதாக மட்டுமே இருக்கும் எனவும் கூறியுள்ளார்.




