வணக்கம் வணக்கம் வணக்கம்...! அள்ள அள்ள பணம்..! என்ற தலைப்பில் பங்கு சந்தையில் பணம் அள்ளுவது எப்படி என நான்கு பகுதிகளை நாம் பார்த்து விட்டோம். ஒரு வேளை, அவற்றை படிக்காமல் நேரடியாக இங்கே வந்திருந்தால் தயவு செய்து கீழே உள்ள லிங்க்குகளை பயன்படுத்தி அந்த இரண்டு பகுதிகளையும் படித்து விட்டு வாருங்கள். அப்போது தான் இந்த பகுதியை புரிந்து கொள்ள முடியும்.
1.பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 1
2.பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 2

4.பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 4
வணக்கம் நண்பர்களே..! கடந்த பகுதியில் மார்கெட்டில் எந்தெந்த வகையில் ட்ரேடிங் செய்யலாம் என்பதை சுருக்கமாக பார்த்திருந்தோம். அவற்றை, அடுத்தடுத்து வரும் பகுதிகளில் தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.
இப்போது, Intraday Treading என்றால் என்ன..? Delivery Based Trading என்றால் என்ன..? இரண்டிற்கும் உள்ள சாதக பாதகங்கள் என்ன என்பதையும். Trade செய்வதற்கு எப்படி சரியான நிறுவனங்களை தேர்வு செய்வது என்பதை பற்றியும் விரிவாக பார்ப்போம்.
அதெப்படி சார், பங்கை ஒரே நாளில் வாங்கி விற்பது. ஒரே நாளில் ஒரு நிறுவனத்தில் எப்படி லாபம் பார்க்க முடியும். என்ன விளையாட்டுறீங்களா..? என்று நீங்கள் கேட்கலாம். Intraday Trading-ல் லாபம் பார்க்க முடியும். அதே அளவுக்கு நஷ்டத்தையும் பார்க்க முடியும்.
சந்தையில் பங்குகளில் விலை நொடிக்கு நொடி எப்படி ஏறி இறங்குகின்றது என்பதை பகுதி 1-ல் நாம் விரிவாக பார்த்தோம். ஒரு நாளில் சந்தையில் உள்ள 99% நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏறும், இறங்கும், இறங்கி ஏறும் அல்லது ஏறி இறங்கும். இந்த ஏற்ற இறக்க பாதையில் பயணித்து லாபத்தை அடைவது தான் நம் நோக்கம்.
பங்குகளை ஒரு விலைக்கு வாங்கி அதனை விட 1 ரூபாயோ, 2 ரூபாயோ அல்லது 10 ரூபாயோ அதிகம் வரும் விற்றுவிட வேண்டும். அல்லது, பங்குகளை ஒரு விலைக்கு விற்று அதனை விட 1 ரூபாயோ, 2 ரூபாயோ, அல்லது 10 ரூபாயோவிலைஇறங்கும் போது விற்று விடவேண்டும்.
பங்குகளை வாங்கி விற்பது சரி தான்... அதென்ன விற்றுவிட்டு பிறகு வாங்குவது என்ற கேள்வி இப்போது உங்களுக்கு வரும்.
ஆம்,Intraday Trading-ல் பங்குகளை வாங்கி விற்கவும் முடியும். அதே சமயம், விற்றுவிட்டு வாங்கவும் முடியும்.
இதற்காக, நீங்கள் பங்கின் விலையை முழுமையாக செலுத்த தேவையில்லை. எப்படியும், மாலைக்குள் அந்த பங்குகளை விற்றுவிட போகிறீர்கள். அதனால், ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்தினால் பொதுமானது. இந்த தொகை ஒவ்வொரு Broker நிறுவனத்திற்கும் வேறுபடும். அதனை நீங்கள் இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பங்குகளை வாங்கிவிற்கும் முறையை Long எனவும், விற்றுவிட்டு வாங்கும் முறையை Short என்றும் கூறுகிறார்கள்.
ஒன்னும் புரியலையே..! குழப்பமா இருக்கே..!!!
Short என்றால் என்ன..? வாங்க கொஞ்சம் தெளிவா பார்க்கலாம். உதாரணதிற்கு, இன்று AXIS BANK நிறுவனத்தின் பங்கின் விலை 750 ரூபாய் இருக்கின்றது. இந்த பங்கின் விலை இறங்கும் என நீங்கள் கணித்துள்ளீர்கள்.
இப்போது நீங்கள் என்ன செய்யவேண்டும். 750 ரூபாய்க்கு விற்றுவிட்டு விலை குறைந்தவுடன் வாங்கி கொள்ள வேண்டும். இதனை, ஷார்டிங் (Shorting) என்று கூறுகிறார்கள்.
இன்னும் தெளிவாக நம் நடைமுறை வாழ்வில் ஒரு உதாரணத்தை பார்ப்போமா..! நீங்கள் ஒரு ஸ்டேஷனரி கடைக்கு செல்கிறீர்கள். அங்கே, இன்னொரு வாடிக்கையாளர் வருகிறார். அவர், ஒரு பேனா வேண்டும் என்கிறார். அந்த பேனாவின் விலை 10 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பேனா தேவையில்லை. ஆனாலும், நீங்கள் அந்த பேனாவை 3 ரூபாய் அட்வான்சாக கொடுத்து கடைக்காரரிடம் இருந்து வாங்கி அதனை 10 ரூபாய்க்கு வந்திருந்த வாடிக்கையாளருக்கு விற்றுவிட்டீர்கள்.
ஒரு மணி நேரம் கழித்து அந்த பேனாவின் விலை இரண்டு ரூபாய் குறைந்து 8 ரூபாயாக மாறிவிட்டது. அந்த பேனாவை வாங்கிய வாடிக்கையாளர் உங்களிடம் 8 ரூபாய்க்கு விற்று விடுகிறார். இப்போது, மீண்டும் அந்த பேனாவை கடைக்காரரிடமே கொடுத்துவிட்டு நீங்கள் முதலில் செலுத்திய 3 ரூபாயை திரும்ப பெற்றுக்கொண்டீர்கள்.
இப்போது, உங்களுக்கு இரண்டு ரூபாய் லாபம்.
நீங்கள் ஒரு நகைக்கடைக்கு செல்கிறீர்கள். ஒரு கிராம் தங்கம் வாங்குகிறீர்கள். ஒரு கிராம் தங்கத்தின் விலை 2300 ரூபாய். இப்போது, நீங்கள் ஒரு 300 ரூபாயை நகைக்கடைகாரரிடம் கொடுத்து இன்று மாலைக்குள் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறி ஒரு கிராம் தங்கத்தை வாங்கிவிட்டீர்கள். வாங்கிய அந்த ஒரு கிராம் தங்கத்தை 2300 ரூபாய்க்கு விற்றுவிட்டீர்கள். நீங்கள் விற்ற பிறகு ஒரு கிராம் தங்கத்தின் விலை 2150 ரூபாயாக குறைந்து விட்டது.
இப்போது, நீங்கள் 2000 ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கத்தை வாங்கி மீண்டும் நகைக்கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு நீங்கள் செலுத்திய 300 ரூபாயையும் வாங்கிக்கொள்கிறீர்கள்.
இப்போது,உங்களுடைய லாபம் 150 ரூபாய். ஒரு வேளை, நீங்கள் 2300 ரூபாய்க்கு விற்ற பிறகு, ஒரு கிராம் தங்கத்தின் விலை 2500 ரூபாயாக உயர்ந்திருந்தால் உங்களுக்கு 200 ரூபாய் நஷ்டம். இதை தான் மார்கெட்டில் Short என்று கூறுகிறார்கள். இதில், கடைக்காரர் என்பவர் உங்கள் Broker. அந்த 300 ரூபாய் என்பது நீங்கள் ஒரு பங்கை விற்பதற்கு கட்டவேண்டிய தொகை அவ்வளவு தான்.
ஆக, பங்குகளின் விலை ஏறும் போதும் லாபம் சம்பாதிக்கலாம். இறங்கும் போதும் லாபம் சம்பாதிக்கலாம். ஆனால், அதனை நாம் சரியாக கணிக்க வேண்டும். அதற்கு தான் பங்குகளை Analysis செய்யவேண்டும். எப்படி பங்குகளை Analysis செய்வது என்பது பற்றியும், எந்தெந்த வகையில் அனலைஸ் செய்ய வேண்டும் என்பது பற்றியும் அடுத்த பகுதியில் பாப்போம்.
Intraday Trading-ஐ பொறுத்தவரை ரிஸ்க் அதிகம். அதே சமயம், லாபமும் அதிகமாக சம்பாதிக்கலாம். ஆனால், இந்த IntraDay Trading பயம், படபடப்பு இவையெல்லாம் நமக்கு சற்று அதிகமாகவே தரும். உதாரணதிற்கு, விலை ஏறும் என நினைத்துக்கொண்டு ஆயிரம் பங்குகளை வாங்கிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளவோம்.
நீங்கள் வாங்கிய பிறகு அந்த பங்கின் விலை வெறும் இரண்டு ரூபாய் குறைந்தால் கூட உங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். மேலும், வாங்கிய அன்று மாலைக்குள் நீங்கள் பங்குகளை விற்றாக வேண்டும். இல்லையென்றால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், முடிந்தவரை சந்தைக்குள் புதிதாக நுழைபவர்கள் Intraday Trading-ஐ தவிர்த்து விடுவது நல்லது.
இல்லை நான் முயற்சி செய்து பார்கிறேன் என்று நீங்கள் விரும்பினால். குறைந்த அளவிலான பங்குகளை வாங்குங்கள். அதாவது, 10 அல்லது இருபது பங்குகளை மட்டும் வாங்கி விற்க முயலுங்கள். அப்படியே நஷ்டம் ஆனால் கூட குறைந்த அளவிலேயே இருக்கும். தொடர்ந்து, உங்கள் கணிப்பு நல்ல லாபத்தை தருகின்றது என்றால் பிறகு பெரிய அளவில் செய்யலாம்.
சரி வாங்க, Delivery Trading என்றால் என்ன என்று பார்க்கலாம்..!
எந்த பங்கில் நான் முதலீடு செய்ய வேண்டும்..? எப்படி தேர்வு செய்வது..? போன்ற விபரங்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
உங்களது சந்தேகங்களை நம்முடைய முகநூல் பக்கங்களில் கேட்கலாம் நண்பர்களே. உங்களுக்கு பதிலிக்க நான் காத்திருக்கிறேன்.
தொடர்ந்து வரும், பதிவுகளை தவற விடமால் பார்க்க இந்த ( https://www.facebook.com/tamizhakamsmt/ ) முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள். அல்லது, (https://t.me/tamizhakamsmt) என்ற Telegram Channel-ல் இணைந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பதிவுகளின் லிங்குகளை நான் அவற்றில் உங்களுக்கு பகிர்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.
உங்களிடம் டெலிகிராம் ஆப் இல்லையென்றால் தயவு செய்து இன்ஸ்டால் செய்து நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதில், அனைத்து பதிவுகளின் லிங்குகள். அவ்வபோது செய்யப்படும் அப்டேட்டுகள் உங்களுக்கு தவறாமல் கிடைக்கும்.
வணக்கம் நண்பர்களே..! கடந்த பகுதியில் மார்கெட்டில் எந்தெந்த வகையில் ட்ரேடிங் செய்யலாம் என்பதை சுருக்கமாக பார்த்திருந்தோம். அவற்றை, அடுத்தடுத்து வரும் பகுதிகளில் தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.
இப்போது, Intraday Treading என்றால் என்ன..? Delivery Based Trading என்றால் என்ன..? இரண்டிற்கும் உள்ள சாதக பாதகங்கள் என்ன என்பதையும். Trade செய்வதற்கு எப்படி சரியான நிறுவனங்களை தேர்வு செய்வது என்பதை பற்றியும் விரிவாக பார்ப்போம்.
Intraday Trading :
இதனை பற்றி நாம் கடந்த பகுதியில் சுருக்காமாக பார்த்தோம். அதாவது, ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்க வேண்டும்.அதெப்படி சார், பங்கை ஒரே நாளில் வாங்கி விற்பது. ஒரே நாளில் ஒரு நிறுவனத்தில் எப்படி லாபம் பார்க்க முடியும். என்ன விளையாட்டுறீங்களா..? என்று நீங்கள் கேட்கலாம். Intraday Trading-ல் லாபம் பார்க்க முடியும். அதே அளவுக்கு நஷ்டத்தையும் பார்க்க முடியும்.
சந்தையில் பங்குகளில் விலை நொடிக்கு நொடி எப்படி ஏறி இறங்குகின்றது என்பதை பகுதி 1-ல் நாம் விரிவாக பார்த்தோம். ஒரு நாளில் சந்தையில் உள்ள 99% நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏறும், இறங்கும், இறங்கி ஏறும் அல்லது ஏறி இறங்கும். இந்த ஏற்ற இறக்க பாதையில் பயணித்து லாபத்தை அடைவது தான் நம் நோக்கம்.
பங்குகளை ஒரு விலைக்கு வாங்கி அதனை விட 1 ரூபாயோ, 2 ரூபாயோ அல்லது 10 ரூபாயோ அதிகம் வரும் விற்றுவிட வேண்டும். அல்லது, பங்குகளை ஒரு விலைக்கு விற்று அதனை விட 1 ரூபாயோ, 2 ரூபாயோ, அல்லது 10 ரூபாயோவிலைஇறங்கும் போது விற்று விடவேண்டும்.
பங்குகளை வாங்கி விற்பது சரி தான்... அதென்ன விற்றுவிட்டு பிறகு வாங்குவது என்ற கேள்வி இப்போது உங்களுக்கு வரும்.
ஆம்,Intraday Trading-ல் பங்குகளை வாங்கி விற்கவும் முடியும். அதே சமயம், விற்றுவிட்டு வாங்கவும் முடியும்.
இதற்காக, நீங்கள் பங்கின் விலையை முழுமையாக செலுத்த தேவையில்லை. எப்படியும், மாலைக்குள் அந்த பங்குகளை விற்றுவிட போகிறீர்கள். அதனால், ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்தினால் பொதுமானது. இந்த தொகை ஒவ்வொரு Broker நிறுவனத்திற்கும் வேறுபடும். அதனை நீங்கள் இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பங்குகளை வாங்கிவிற்கும் முறையை Long எனவும், விற்றுவிட்டு வாங்கும் முறையை Short என்றும் கூறுகிறார்கள்.
ஒன்னும் புரியலையே..! குழப்பமா இருக்கே..!!!
Short என்றால் என்ன..? வாங்க கொஞ்சம் தெளிவா பார்க்கலாம். உதாரணதிற்கு, இன்று AXIS BANK நிறுவனத்தின் பங்கின் விலை 750 ரூபாய் இருக்கின்றது. இந்த பங்கின் விலை இறங்கும் என நீங்கள் கணித்துள்ளீர்கள்.
இப்போது நீங்கள் என்ன செய்யவேண்டும். 750 ரூபாய்க்கு விற்றுவிட்டு விலை குறைந்தவுடன் வாங்கி கொள்ள வேண்டும். இதனை, ஷார்டிங் (Shorting) என்று கூறுகிறார்கள்.
இன்னும் தெளிவாக நம் நடைமுறை வாழ்வில் ஒரு உதாரணத்தை பார்ப்போமா..! நீங்கள் ஒரு ஸ்டேஷனரி கடைக்கு செல்கிறீர்கள். அங்கே, இன்னொரு வாடிக்கையாளர் வருகிறார். அவர், ஒரு பேனா வேண்டும் என்கிறார். அந்த பேனாவின் விலை 10 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பேனா தேவையில்லை. ஆனாலும், நீங்கள் அந்த பேனாவை 3 ரூபாய் அட்வான்சாக கொடுத்து கடைக்காரரிடம் இருந்து வாங்கி அதனை 10 ரூபாய்க்கு வந்திருந்த வாடிக்கையாளருக்கு விற்றுவிட்டீர்கள்.
ஒரு மணி நேரம் கழித்து அந்த பேனாவின் விலை இரண்டு ரூபாய் குறைந்து 8 ரூபாயாக மாறிவிட்டது. அந்த பேனாவை வாங்கிய வாடிக்கையாளர் உங்களிடம் 8 ரூபாய்க்கு விற்று விடுகிறார். இப்போது, மீண்டும் அந்த பேனாவை கடைக்காரரிடமே கொடுத்துவிட்டு நீங்கள் முதலில் செலுத்திய 3 ரூபாயை திரும்ப பெற்றுக்கொண்டீர்கள்.
இப்போது, உங்களுக்கு இரண்டு ரூபாய் லாபம்.
நீங்கள் ஒரு நகைக்கடைக்கு செல்கிறீர்கள். ஒரு கிராம் தங்கம் வாங்குகிறீர்கள். ஒரு கிராம் தங்கத்தின் விலை 2300 ரூபாய். இப்போது, நீங்கள் ஒரு 300 ரூபாயை நகைக்கடைகாரரிடம் கொடுத்து இன்று மாலைக்குள் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறி ஒரு கிராம் தங்கத்தை வாங்கிவிட்டீர்கள். வாங்கிய அந்த ஒரு கிராம் தங்கத்தை 2300 ரூபாய்க்கு விற்றுவிட்டீர்கள். நீங்கள் விற்ற பிறகு ஒரு கிராம் தங்கத்தின் விலை 2150 ரூபாயாக குறைந்து விட்டது.
இப்போது, நீங்கள் 2000 ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கத்தை வாங்கி மீண்டும் நகைக்கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு நீங்கள் செலுத்திய 300 ரூபாயையும் வாங்கிக்கொள்கிறீர்கள்.
இப்போது,உங்களுடைய லாபம் 150 ரூபாய். ஒரு வேளை, நீங்கள் 2300 ரூபாய்க்கு விற்ற பிறகு, ஒரு கிராம் தங்கத்தின் விலை 2500 ரூபாயாக உயர்ந்திருந்தால் உங்களுக்கு 200 ரூபாய் நஷ்டம். இதை தான் மார்கெட்டில் Short என்று கூறுகிறார்கள். இதில், கடைக்காரர் என்பவர் உங்கள் Broker. அந்த 300 ரூபாய் என்பது நீங்கள் ஒரு பங்கை விற்பதற்கு கட்டவேண்டிய தொகை அவ்வளவு தான்.
ஆக, பங்குகளின் விலை ஏறும் போதும் லாபம் சம்பாதிக்கலாம். இறங்கும் போதும் லாபம் சம்பாதிக்கலாம். ஆனால், அதனை நாம் சரியாக கணிக்க வேண்டும். அதற்கு தான் பங்குகளை Analysis செய்யவேண்டும். எப்படி பங்குகளை Analysis செய்வது என்பது பற்றியும், எந்தெந்த வகையில் அனலைஸ் செய்ய வேண்டும் என்பது பற்றியும் அடுத்த பகுதியில் பாப்போம்.
Intraday Trading-ஐ பொறுத்தவரை ரிஸ்க் அதிகம். அதே சமயம், லாபமும் அதிகமாக சம்பாதிக்கலாம். ஆனால், இந்த IntraDay Trading பயம், படபடப்பு இவையெல்லாம் நமக்கு சற்று அதிகமாகவே தரும். உதாரணதிற்கு, விலை ஏறும் என நினைத்துக்கொண்டு ஆயிரம் பங்குகளை வாங்கிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளவோம்.
நீங்கள் வாங்கிய பிறகு அந்த பங்கின் விலை வெறும் இரண்டு ரூபாய் குறைந்தால் கூட உங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். மேலும், வாங்கிய அன்று மாலைக்குள் நீங்கள் பங்குகளை விற்றாக வேண்டும். இல்லையென்றால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், முடிந்தவரை சந்தைக்குள் புதிதாக நுழைபவர்கள் Intraday Trading-ஐ தவிர்த்து விடுவது நல்லது.
இல்லை நான் முயற்சி செய்து பார்கிறேன் என்று நீங்கள் விரும்பினால். குறைந்த அளவிலான பங்குகளை வாங்குங்கள். அதாவது, 10 அல்லது இருபது பங்குகளை மட்டும் வாங்கி விற்க முயலுங்கள். அப்படியே நஷ்டம் ஆனால் கூட குறைந்த அளவிலேயே இருக்கும். தொடர்ந்து, உங்கள் கணிப்பு நல்ல லாபத்தை தருகின்றது என்றால் பிறகு பெரிய அளவில் செய்யலாம்.
சரி வாங்க, Delivery Trading என்றால் என்ன என்று பார்க்கலாம்..!
Delivery Based Trading / Cash and Carry
இந்த வகை ட்ரேடிங்கில் நீங்கள் ஒரு பங்கை வாங்கி எப்போது வேண்டுமானாலும் விலை ஏறும் போது விற்றுக்கொள்ளளாம். இதில், அதிக அளவு லாபம் கிடைக்கும். ஒரு வருடம் அல்லது ஐந்து வருடம் கூட நீங்கள் வாங்கிய பங்குகளை வைத்திருக்கலாம். ஆனால், சரியான நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது அந்த பங்கின் நிலவரத்தை கண்கானிக்க வேண்டும். இதற்கு, பங்குகளுக்கான முழு தொகையையும் நீங்கள் செலுத்த வேண்டும்.எந்த பங்கில் நான் முதலீடு செய்ய வேண்டும்..? எப்படி தேர்வு செய்வது..? போன்ற விபரங்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.