நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் தளபதி63 படத்தின் கதை பெண்கள்
கால்பந்து பற்றியது என்று தகவல்கள் தொடர்ந்து வருகின்றது. மேலும் பல கோடி
செலவு செய்து கால்போனது மைதானம் போல செட் போட்டு ஷூட்டிங் செய்து
வருகின்றனர்.
இந்நிலையில் குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா இந்த படத்தின் கதை என்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால்
அவர் சங்கத்தில் சேர்ந்து இன்னும் 6 மாதம் ஆகவில்லை என கூறி எழுத்தாளர்
சங்கம் அவரது புகாரை நிராகரித்துளளது. இதுபற்றி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்
கே.பி.செல்வா.
நீதிமன்றம் தற்போது தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்
அனுப்பியுள்ளது. அடுத்தகட்ட விசாரணை 23ம் தேதி நடைபெறவுள்ளது.


