அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் கதை விளையாட்டை மையப்படுத்தியது என்று தகவல் வெளியாகியுள்ளது.
'சர்கார்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நவம்பர் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.
அட்லீ இயக்கவுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி இப்படத்தில் இணைந்திருக்கிறது.
இப்படம் முழுக்க விளையாட்டை மையப்படுத்தியே அமைத்திருக்கிறாராம் இயக்குநர் அட்லீ. இதில் விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடித்து வருகிறார். என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் ஜனரஞ்சகமாக திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் அட்லீ.
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு படத்தின் தலைப்பு "C.M (Captain Michael )" என இணையத்தில் ஒரு தகவல் வைரலானது. ஆனால், இது குறித்து படக்குழு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், இது தான் தலைப்பாக இருக்குமோ என்று ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறார்கள்.
Tags
Cinema