தொக்காக சிக்கிய TVK விஜய்! CBI மீட்டெடுத்த Deleted Drone காட்சிகள்! வெளிச்சத்திற்கு வந்த கொடூரம்! பகீர் வீடியோ!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (டிவிகே) கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் அக்கட்சி மற்றும் அதன் நிர்வாகிகள் தான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் கூட்டம் மதியம் 12 மணி முதல் 3 மணிக்குள் நடைபெறும் என அப்பகுதியில் தகவல் பரப்பப்பட்டதாகவும், ஆனால் போதிய கூட்டம் வராததால் நடிகர் விஜய்யை வேண்டுமென்றே தாமதமாக வரச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதாகவும், குறிப்பாக சனிக்கிழமை வேலை முடிந்து வீடு திரும்பிய பலர் அந்த வழியில் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சாலை வழியாக சென்றவர்கள் எனவும், இரு பக்கங்களும் செல்ல முடியாமல் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

பாதி பேர் மட்டுமே விஜய்யை பார்க்க வந்தவர்கள் எனவும், டிவிகே தரப்பு திட்டமிட்டு தாமதம் செய்தது இந்த துயர சம்பவத்திற்கு காரணம் எனவும் விஜய் மீது முதல் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

ஆனால், நடிகர் விஜய் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு காவல் துறை மற்றும் தமிழக அரசு தான் எனக் கூறி வருகிறார். கரூரைச் சேர்ந்த முக்கிய திமுக பிரமுகரான செந்தில் பாலாஜி இதில் பெரிய தொடர்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். மேலும், மேடைகளில் "சிஎம் சார், என்னை ஏன் கரூர் சம்பவத்தில் பலியாடாக்க முயற்சி செய்தீர்கள்" எனப் பேசி வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், பிரபல யூட்யூபரும் அரசியல் விமர்சகருமான மாரிதாஸ், கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான வீடியோ ஃபுட்டேஜ்களை அழிக்க விஜய் முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய் கட்சி சார்பில் எடுக்கப்பட்ட டிரோன் காட்சிகளை முதலில் அழிக்க உத்தரவிட்டதாகவும், சிபிஐ அண்மையில் அதை மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், விஜய்யின் வாகன கேமரா பதிவுகள் உட்பட சுமார் 3 மணி நேர அளவிலான காட்சிகளை அழிக்க முயற்சி நடந்ததாகவும் தகவல். இந்தக் காட்சிகளில், விஜய் கூட்டத்திற்கு வரும்போதும் மேடையில் நிற்கும்போதும் கூட்ட நிலைமை அவருக்கு நன்கு தெரிந்திருந்தது தெரிய வருவதாகவும், "எனக்கு எதுவும் தெரியாது" என அவர் கூறுவதை சிபிஐ ஏற்கத் தயாரில்லை எனவும் மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.

விஜய் தரப்பு பல ஆதாரங்களை மீடியாவிற்கு தராமல் அழிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஜய் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாரிதாஸ் வெளியிட்ட இந்த டிரோன் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Summary : In the Karur gathering incident, attempts were made to delete key video footage, including drone recordings taken by TVK and vehicle camera clips totaling around 3 hours. CBI recently recovered some of this material. The footage reportedly shows Vijay was aware of the crowd situation. He has been summoned again for questioning.