ஆஸ்கர் விருது வாங்கிய நடிகர் ஜெஃப்ரீ ரஷ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஏல் ஸ்டோன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை
சேர்ந்தவர் ஏல் ஸ்டோன்(33). நெட்ஃபிளிக்ஸில் ஹிட்டான ஆரஞ்சு இஸ் தி நியூ
பிளாக்கில் நடித்தவர். அவர் ஆஸ்கர் விருது வாங்கிய சீனியர் நடிகரான ஜெஃப்ரீ
ரஷ்(67) மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
நாடகத்தில் சேர்ந்து நடித்தபோது ரஷ் தொல்லை கொடுத்ததாக ஸ்டோன் கூறியுள்ளார்.2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் தி டைரி ஆஃப் எ மேட்மேன் மேடை நாடகத்தில்
நான் ரஷ் ஜோடியாக நடித்தேன்.
அப்பொழுது அவர் உடை மாற்றும் அறையில் என்
முன்பு நிர்வாணமாக ஆடினார். எனக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பினார்.
தேவையில்லாமல் ஒட்டி, உரசி பேசினார் என்று ஏல் ஸ்டோன் புகார்
தெரிவித்துள்ளார்.நான் குளிக்கும்போது கண்ணாடியை வைத்து பார்த்தார்.
நாடகத்திற்கு இடையே
அவருக்கு உடையை கழற்றிவிடுமாறு என்னிடம் கூறினார். மேலும் என் பின்னால்
தடவி அசிங்கமாக நடந்து கொண்டார் என்று ஏல் ஸ்டோன் தெரிவித்துள்ளார். ஆனால்
ஏல் ஸ்டோனின் குற்றச்சாட்டை ரஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நான் வேலை நேரத்தில் ஓவர் எனர்ஜியுடன் இருந்ததை பார்த்து ஏல் ஸ்டோன்
அதிப்தி அடைந்தார். ஆனால் நான் அவரிடம் தவறாக நடக்கவில்லை. அவருக்கு ஏதாவது
அசவுகரியம் ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.
இது என்
உள்நோக்கம் இல்லை என்று ரஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த நாடகத்தில் நடித்தபோது ஸ்டோன் மற்றும் ரஷ் ஆகியோர் ஒரே அறையில் தான்
உடை மாற்றியுள்ளனர். தடுப்பு போடப்பட்ட குளியல் அறையில் குளிக்கும்போது ரஷ்
கண்ணாடியை மேலே வைத்து தான் நிர்வாணமாக இருந்ததை பார்த்ததாக
தெரிவித்துள்ளார் ஸ்டோன்.
அந்த சம்பவத்திற்கு பிறகு தான் எங்குமே
பாதுகாப்பாக உணரவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




