விஜய் படங்கள் அதிகம் ஹிட் வரிசையில் உள்ளது. அதில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த படம் என்றால் கில்லியை கூறலாம்.
மாஸ்,
த்ரில், காமெடி, சென்டிமென்ட் என ஒட்டுமொத்த கலவையாக இப்படம் அமைந்தது,
வெற்றியும் கண்டது. இப்படத்தை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சண்டே
கலாட்டா நிகழ்ச்சியில் ஸ்பூஃப் செய்திருந்தார் அப்படத்திலேயே விஜய்க்கு
தங்கையாக நடித்த ஜெனிஃபர்.
அந்த நிகழ்ச்சி அனுபவம் குறித்து
பேசும்போது விஜய் ரசிகர்களால் பிரச்சனை வந்ததா என கேட்டுள்ளனர். அதற்கு
அவர், 15 வருஷம் கழித்து தளபதி தங்கையாக நடித்தது சிலிர்ப்பா இருந்தது,
விஜய் அண்ணா இல்லாத குறை ஒன்றுதான்.
சிலர் விஜய் படத்தை ஸ்பூஃப்
செய்கிறாயே தளபதி ரசிகர்கள் வெச்சு செய்யப் போகிறார்கள் என்றார்கள். ஆனா
எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. ஏனெனில் விஜய் அண்ணாவிற்கு மட்டுமில்லை
அவரது ரசிகர்களுக்கும் நான் செல்லம் தான் என பேசி அலேக்காக தப்பியுள்ளார்.
Tags
Cinema