தாறுமாறாக டேமேஜ் ஆகிய பெயர்..! - ஓவியா கையில் இருக்கும் ஒரே நம்பிக்கை..! - வொர்க் அவுட் ஆகுமா..?

'களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. அதன்பின் சில படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தன.

இருந்தாலும் முன்னணி நடிகைகளின் வரிசையில் அவரால் இடம் பெற முடியவில்லை.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். அவருக்காக ஓவியா ஆர்மி என்றெல்லாம் துவங்கப்பட்டு பிரபலம் ஆனார்.

அதன்பின் அவருக்கு நிறைய புதுப்பட வாய்ப்புகள் வந்தன. அவற்றில் ஒன்று 'காஞ்சனா 3'. இந்தப் படம்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நடித்து வெளிவரும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன்பாகவே '90 எம்எல்' படம் வெளியாகி ஓவியாவின் இமேஜை தகர்த்தது. அந்தப் படத்தில் நடித்ததற்கு அவருக்கு கடுமையான எதிர்ப்புகளும் வந்தது. அந்த இமேஜை இந்த வாரம் வெளிவர உள்ள 'காஞ்சனா 3' படம் மாற்றினால் தான் ஓவியா இழந்த இமேஜை மீட்க முடியும்.

படத்தில் மேலும் இரண்டு நாயகிகள் இருப்பதால் ஓவியாவுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளது என்பது படம் வந்தால்தான் தெரியும்.
Previous Post Next Post