இன்றைய இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றுதான் டிக் டாக். இதில் திரைப்பட பாடல்கள், வசனங்களுக்கு முகபாவனைகளை செய்து, சமூக வலைதளங்களில் பலரும் வெளியிட்டு வருகின்றனர்.
பேஸ்புக்கைவிட இன்றையதலைமுறையினரிடையே பிரபலமடைந்து வரும் டிக் டாக் செயலியில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது அந்த பட்டியலில் நடிகை ஷகிலாவும் இணைந்துள்ளார்.
டிக் டாக் வீடியோ ஒன்றில் நடிகர் விஜய் நடித்த மெர்சல் பட பாடலுக்கு ஷகிலா நடித்துள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.


