நம்ம "கும்கி" லக்ஷ்மி மேனன் - "நோ" பட வாய்ப்பு - இப்ப என்ன பண்றாங்க பாருங்க..!


கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை லக்ஷ்மி மேனன். கொம்பன், வேதாளம், மிருதன் என பெரிய படங்களில் நடித்தார். 

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. பிரபுதேவாவுக்கு ஜோடியாக யங் மங் சங் என்கிற படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. 

அதிலும் அவர் முழு ஷூட்டிங்கையும் முடித்துவிட்டார். ஆனால் பல வருடங்கள் ஆகியும் அது திரைக்கு வராமல் உள்ளது.இந்த பிரேக் பற்றி ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்துள்ள அவர் தான் தற்போது படிப்பில் கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ளார். 

குச்சிப்புடி நடனத்திற்கு டிப்ளமோ படித்துவருகிறார் அவர். மேலும் அவர் சோஷியாலஜி டிகிரியும் படித்துவருவதாக தெரிவித்துள்ளார்.

அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல லக்ஷ்மி மேனனுக்கு ரீஎன்ட்ரி வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.