இது வரலக்ஷ்மியின் சேஸிங்..!

கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வில்லி கதாபாத்திரம், குணச்சித்ரம் வேடம் என்றால் கூட நடித்து வருகிறார் வரலட்சுமி.

இவரை பொறுத்தமட்டில் தனது ரோல் வலுவானதாக இருக்க வேண்டும். சர்க்கார், சண்டக்கோழி 2 படங்களில் அவரது வில்லி நடிப்பு பேசப்பட்டது.

தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வரும் வரலட்சுமி சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார். அதில் ஒரு படம் தான் சேஸிங். இதில் ஆக்சன் ஹீரோயினாக நடிக்கிறார்.

கே.வீரக்குமார் என்பவர் இயக்கும் இந்த படத்தில் வரலட்சுமி பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டனர்.

சமீபத்தில் வரலட்சுமிக்கு மக்கள் செல்வி என பட்டம் கொடுத்தனர். அந்தப்பட்டம் சேஸிங் போஸ்டரில் தொடர்கிறது.