நிச்சயம் நான் தற்கொலை செய்துகொண்டிருப்பேன் - வேதனையை பகிர்ந்த நடிகர் மனோபாலா

தற்போது காமெடியனாக பல படங்களில் வலம் வருபவர் நடிகர் மனோபாலா. அவர் ஒருகாலத்தில் இயக்குனராக இருந்து பின்னர் நடிப்பில் இறங்கியவர்.

அவர் இயக்கிய முதல் படம் ஆகாயகங்கை. அந்த படம் தோல்வி அடைந்ததால் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டு வருடங்கள் வீட்டில் தான் இருந்தேன். சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட தோன்றியது.

அதன்பின் சென்னைக்கு கையில் வெறும் ஒன்னேகால் ரூபாயுடன் வந்தேன். 1 ரூபாய்க்கு ஒரே ஒரு தோசை வாங்கி கையேந்தி பவனில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, தயாரிப்பாளர் கலைமணி வந்து எனக்கு படம் இயக்க வாய்ப்பு தருவதாக கூறி. கையில் ஒரு ஐம்பது ருபாய் கொடுத்தார்.

அதன்பின் நான் இயக்கி வெற்றி பெற்ற படம் தான் 'பிள்ளைநிலா'. அவர் மட்டும் கூப்பிடாமல் இருந்திருந்தால் நான் நிச்சயம் தற்கொலை தான் செய்திருப்பேன் என மனோபாலா உருக்கமாக பேசியுள்ளார்.
Previous Post Next Post