இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் நடிகை மாளவிகா அதிரடி முடிவு..!


வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திருமணம் என்ற சூப்பர்ஹிட் பாடல் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா.

அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் சமூக வலைத்தளங்களில் அவரது புதிய புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்க ஆசை இருப்பதாக மாளவிகா தெரிவித்துள்ளார். இதுவரை என் குடும்பத்தை பார்த்துவந்தேன். தற்போது மீண்டும் நடிக்க விரும்புகிறேன். 

கதைகள் கேட்டு வருகிறேன். விரைவில் நல்ல கதையில் நடிப்பேன்" என அவர் கூறியுள்ளார்.