ஆளப்போறான் தமிழன் பாடல் Youtube ல் 100 மில்லியன் பார்வைகளை கடந்து
அண்மையில் பெரும் சாதனை படைத்தது. இதனை ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியுடன்
கொண்டாடினர்.
அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் வந்த இப்பாடலை
எழுதியவர் விவேக். தொடர்ந்து சர்கார், விஜய் 63 படங்களுக்கு அவரே பாடல்
எழுதியுள்ளார். ரஜினியின் பேட்ட, தர்பார் படங்களுக்கு அவரே
பாடலாசிரியாகவுள்ளார்.
தற்போது அவர் ஆளப்போறான் பாடல் வெற்றி
குறித்து பேசியுள்ளார். அதில் இப்பாடல் 10 கோடி பார்வைகளை பெற்றுள்ளது
மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பாடலில் இருக்கும் உணர்வு தமிழர்களுடையது.
வரிகள்
மட்டும் தான் என்னுடையது. சரியான பாதையில் என் சினிமா பயணம் செல்ல
இப்பாடல் எனக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. விஜய் நடிப்பு, ரஹ்மான் இசை,
அட்லி காட்சிப்படுத்திய விதம் ஆகியவற்றால் தான் இப்பாடல் சாதனை உயரத்தை
அடைந்துள்ளது என கூறியுள்ளார்.


