நடிகர் விவேக் புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ள வெள்ளைப்பூக்கள் படம்
இந்த வாரம் திரைக்கு வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில்
படமாக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு காட்சி படமாக்கும்போது விவேக்
நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். அங்கு ஒரு கைவிடப்பட்ட அணுஉலையில் ஷூட்டிங்
நடத்தியபோது தான் விபத்து நடந்துள்ளது.
குற்றவாளியை பின்பற்றி விவேக் அந்த அணுஉலை மீது எறியுள்ளார். அதை படமாக்க ஒரு drone கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.
"500
அடி உயரத்தை தாண்டியதும் மொபைல் சிக்னல் கிடைக்கவில்லை. படக்குழுவுடன்
தொடர்பு கொள்ள முடியாத. அந்த சமயத்தில் drone பழுதாகியது. அது என்னை நோக்கி
வந்து நொறுங்கியது.
நான் சற்று நகராமல் இருந்திருந்தால் அதில்
சிக்கியிருப்பேன். அதில் பாதுகாப்புக்கு இருந்தவர் சிக்கி படுகாயமடைந்தார்"
என விவேக் தெரிவித்துளளார்.


