பரவிய வதந்தி - ஒரே அறிவிப்பில் முற்றுப்புள்ளி வைத்த "சன்" நடிகர்..!

தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைக்கு பெரும் நட்சத்திரக் குடும்பம் என்றால் மார்க்கண்டேய நடிகர் குடும்பம் தான். மூத்த மகன், இளைய மகன், மூத்த மருமகள் ஆகியோர் தமிழ் சினிமாவில் முக்கிய புள்ளிகளாக இருக்கிறார்கள்.

அவர்கள் நடிக்கும் படங்களை அவர்களது உறவினர்களும், நண்பர்களும் தயாரித்து வருகிறார்கள். வெளித் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பது மிக மிகக் குறைவு.

இருந்தாலும், உறவினர்களின் நான்கைந்து நிறுவனங்களில் எந்தப் படங்களில் அவர்கள் நடிப்பார்கள் என்பது உறவினர் தயாரிப்பாளர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. கனவு போராளி தயாரிப்பு நிறுவனத்திற்கும், பச்சை நிறுவனத்திற்கும் இடையில்தான் கடந்த சில வருடங்களாக இதில் கடும் போட்டி.

பச்சை நிறுவனத்தில் இனி குடும்பத்தின் மூத்த 'சன்' நடிகர் நடிக்க மாட்டார் என சிலர் வதந்தியைப் பரப்பினார்கள். ஆனால், அது வதந்திதான் என்பதை நேற்று வெளியான புதுப்பட அறிவிப்பின் மூலம் 'சன்' நடிகர் நிரூபித்து வதந்தி பரப்பியவர்களை வாயடைக்க வைத்துவிட்டார். மேலும், வெளி ஆட்களுக்கு அனுமதி கிடையாதுஎன்பது போல வெளி தயாரிப்பாளர்களுக்கு அனுமதி கிடையாது என்பதையும் நிருபித்து விட்டார்.

லாபமோ, நஷ்டமோ அதை நாங்களே பாத்துக்குறோம் என்ற முடிவில் இருக்கிறது மார்கண்டேய குடும்பம்.

சரிதான்..!