இது தான் அஜித்கிட்ட இருக்க பிரச்சனை..! - சொல்கிறார் நிரோஷா..!

அஜித் இவரை தமிழ் திரையுலகத்தில் பிடிக்காதவர்களே இல்லை. பல நடிகர், நடிகைகள் இவருடைய ரசிகர்களாக தான் உள்ளனர்.

அந்த வகையில் ராதிகாவின் தங்கை, அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்த நீரோஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.
நீரோஷாவிடம் தற்போதுள்ள நடிகர்களில் யார் பேவரட் என கேட்க, அவர் ‘அஜித் தான், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்’ என்றார்.

பிறகு அவர் நடித்த படத்தில் எது பிடிக்கும் என கேட்க, அதற்கு அவர் ‘அஜித் நடித்தாலே போதும், அவர் எப்படியிருந்தாலும் பிடிக்கும், அது தான் அஜித்கிட்ட இருக்க பிரச்சனையே, எந்த லுக்கிலும் கவர்ந்துவிடுவார்’ என கூறியுள்ளார்.