நடிகை நயன்தாராவின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும்
கொலையுதிர்காலம் படத்தின் ப்ரஸ்மீட்டில் கலந்து கொண்ட ராதாரவி நயன்தாராவை
அவதூறாக பேசியது பரபரப்பாக பேசப்பட்டது.
தமிழக முதல்வர் உள்பட பலர்
கண்டனம் தெரிவித்திருந்த இவ்விஷயத்திற்கு நயன்தாராவும் தனது பங்கிற்கு
அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், சுப்ரீம் கோர்ட்டின்
உத்தரவுபடி உள் புகார் குழுவை நீங்கள் நிறுவுவீர்களா? விஷாகா
வழிகாட்டுதலின்படி உள் விசாரணையை ஆரம்பிப்பீர்களா? போன்ற பல கேள்விகளை
நடிகர் சங்கத்திற்கு முன்பு வைத்தார்.
நயன்தாராவின் இந்த கோரிக்கைகளை
தற்போது ஏற்றிருக்கும் நடிகர் சங்கம், பாலியல் புகார்களை விசாரிக்க விஷாக
குழுவை அமைக்க முன் வந்துள்ளது. இக்குழுவின் தலைவராக நடிகர் சங்க தலைவர்
நாசரே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விஷால், கார்த்தி, குஷ்பூ, ரோகினி,
சுஹாசினி போன்றோரும் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இதுதவிர
நடிகர் சங்கத்திற்கு வெளியில் இருந்து ஒரு வழக்கறிஞரும் ஒரு சமூக ஆர்வலரும்
உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். இதுகுறித்த முறையான அறிவிப்பு
விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
Tags
Cinema