படு மோசமான கவர்ச்சி உடையில் நடிகை இனியா..! - ரசிகர்கள் ஷாக்..! - புகைப்படம் உள்ளே

நடிகை இனியா முன் வரிசைக்கு வருவதற்காக இன்னும் போராடிக் கொண்டிருக்கிற நடிகை. ஆரம்ப காலத்தில் கிடைத்த படத்தில் எல்லாம் நடித்தார். வாகைசூடவா கொடுத்த நல்ல இமேஜையும் காப்பாற்றத் தவறினார். தற்போது அடுத்த ரவுண்டை ஆரம்பித்து விட்டார். பாலிவுட் நடிகைகள் ரேன்ஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்தி, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிறார். தமிழில் தான் இன்னும் அவர் உரிய இடத்தை பிடிக்கவில்லை. தற்போது காபி என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். இதுகுறித்து இனியா கூறியதாவது:

காபி படத்தில் அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன். என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இருக்கும் . தமிழில் வலுவாக நான் கால்பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும்.

மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் என்ற இயக்குனர் இயக்கத்தில் பிருதிவிராஜின் அண்ணன் இந்திரஜித் நடிக்கும் "தாக்கோல்" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கன்னடத்தில் சிவராஜ்குமார் உடன் "துரோணா" என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். கல்வியை மையப்படுத்தி உருவாகிற கதை, எனக்கு நல்ல பெயரை கொடுக்கும்.

மலையாளத்தில் மம்முட்டி நடித்த "பரோல்" என்கிற படத்துக்காகவும், "பெண்களில்லா" என்கிற படத்துக்காகவும் சிறந்த இரண்டாம் கதாநாயகி விருதை கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் வழங்கியது எனக்கு ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. 2018 சிறப்பாக இருந்தது. தமிழில் சின்னதாக இடைவெளி விழுந்துவிட்டது. அது காபி படத்தின் மூலம் சரியாகிவிடும். 2019 இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் இனியா.