பிக்பாஸ் சீசன் 3-ல் அஞ்சனா..! - அவரது கணவரே வெளியிட்ட தகவல் இதோ..!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. அதில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக வருவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ட்விட்டரில் "Something super exciting comin up!!! Will update once it starts moving !!!" என பதிவிட்டுள்ளார்.

இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தான் போட்டியாளராக வருகிறாரோ என ரசிகர்கள் ஆர்வத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அஞ்சனாவின் கணவரும் அதே கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த அஞ்சனா "100 நாள் ஜாலியா இருக்க பாக்குறான் பா" என கலாய்த்துள்ளார்.

மற்றொரு ரசிகரின் கேள்விக்கு தான் பிக்பாஸ் செல்லவில்லை என உறுதியாக பதில் கூறியுள்ளார் அஞ்சனா.
Previous Post Next Post