தமிழக அரசியலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள இழுபறி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) அரசியல் வருகையால் மேலும் சூடுபிடித்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுகவுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், தவெகவுடன் கூட்டணி வைப்பது குறித்து உள்ளேயே விவாதங்கள் எழுந்துள்ளன.

காங்கிரஸ் தலைவர்களில் பலர், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் கட்சியை வளர்த்துக்கொள்ளலாம், புத்துயிர் பெறலாம் என்று விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி இதற்கு ஆதரவாக இருப்பதாகவும், திமுகவுடன் தொடர வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சோனியா காந்தி இதை விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா காந்தியின் முக்கிய காரணம், விஜய்யின் வாக்கு வங்கி எவ்வளவு என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என்பதாகும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தனித்து போட்டியிடாமல் ஒதுங்கியது பெரும் தவறு என்று காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யிடம் நேரடியாகக் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு விஜய், "என்னை மன்னிச்சுடுங்க, அந்த நேரத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் யோசனையை என்னிடம் யாரும் கூறவில்லை" என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
தவெக தரப்பில் இருந்து காங்கிரஸுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், காங்கிரஸ் முடிவு செய்யும் தொகுதிகளை தவெக வழங்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டதாகச் சில தகவல்கள் பரவியுள்ளன.
இதனால், திமுக கூட்டணியில் குறைந்தபட்சம் 35 தொகுதிகள் கிடைத்தால் மட்டுமே தொடர முடியும் என்று ராகுல் காந்தி கட்சியினருக்கு ஆணையிட்டதாகவும் தெரிகிறது.
மறுபுறம், திமுக தரப்பில் காங்கிரஸுக்கு 24 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்க முடியும் என்றும், தேவைப்பட்டால் ஒரு ராஜ்யசபா இடத்தை வழங்க சம்மதம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், 35 எம்எல்ஏக்கள் இருந்தால் காங்கிரஸ் தானே ராஜ்யசபா எம்பி முடிவு செய்யும் சக்தி பெற்றுவிடும் என்பதால், காங்கிரஸ் 35 என்ற எண்ணிக்கையில் பிடிவாதமாக இருப்பதாகத் தெரிகிறது.
"ஒற்றுமையான, உடைக்க முடியாத கூட்டணி" என்று பெருமையாகக் கூறிக்கொண்டிருந்த திமுக-காங்கிரஸ் உறவு, விஜய்யின் அரசியல் எழுச்சியால் தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.
திமுக-காங்கிரஸ் இழுபறி தொடர்ந்தால், தமிழக அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Summary : Congress leaders are divided over allying with Vijay's Tamilaga Vettri Kazhagam for the 2026 Tamil Nadu assembly election. Rahul Gandhi appears open to the idea to strengthen the party, while Sonia Gandhi remains cautious due to uncertainty over TVK's vote share. Meanwhile, seat-sharing talks with DMK have reached a deadlock at 24 seats for Congress.

