பிக்பாஸ் முதல் இரண்டு சீன்களுக்கு ஹிட் ஆனதால் மூன்றாவது சீசனுக்கு
பெரிய வரவேற்பு எழுந்துள்ளது. அதில் யார் யாரெல்லாம் போட்டியாளராக
வருவார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
காமெடி
நடிகை ஜாங்கிரி மதுமிதா போட்டியாளராக வர ஒப்புக்கொண்டுள்ளார் என் முன்பே
தகவல் வெளியான நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் சரவணன்
மீனாட்சி சீரியல் நடிகை ரச்சிதா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், நடிகர்
பிரசன்னா, சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி ஆகியோரை பிக்பாஸ் 3 டீம்
அணுகியுள்ளதாம்.
அவர்கள் ஒப்புக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து
தான் பார்க்க வேண்டும். பிக்பாஸ் இரண்டாவது சீசனிலேயே பவர்ஸ்டார்
கலந்துகொள்வார் என பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.


