விஜய் 63வது படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு
இருக்கிறது. ஒவ்வொரு நாளும் படம் குறித்து அப்டேட் எதிர்ப்பார்ப்பின்
உச்சத்தை தொட வைக்கிறது.
சமீபத்தில் விளையாட்டு மைதானத்தில்
படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது, சிலர்
அதை வரவேற்றாலும் தளபதி படப்பிடிப்பு புகைப்படங்கள் லீக் ஆகிறதே என்றும்
வருத்தப்பட்டனர்.
இப்படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடிப்பவர்
ஞானசம்பந்தம் அவர்கள். இவர் ஒரு பேட்டியில், பட ரிலீசுக்கு பிறகு
கண்டிப்பாக கால்பந்து விளையாட்டில் இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.
கிரிக்கெட் இங்கு அதிகமாக பார்த்தாலும் தீபாவளிக்கு பிறகு கண்டிப்பாக மாற்றம் வரும் என்கிறார்.



