தலைக்கேறிய போதையில் பிக்பாஸ் ஆரவ்...! - கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே

இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிகை ராதிகா மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஆரவ், காவ்யா தாபர் ஆகியோர், மார்கெட் ராஜா என்ற புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்கள். முற்றிலும் மாறுபட்ட டான் கதையில், ஆரவுக்கு அம்மாவாக ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.

இப்படத்தில் பெரம்பூரை மிரட்டும் டானாக நடிக்கிறார் ராதிகா. மேலும், தனது அப்பா எம்.ஆர். ராதா போலவே பேசி நடிக்கிறார் அவர். படத்தில் டானாக நடிக்கும் ராதிகா, கெத்தாக நாற்காலியில் அமர்ந்து சுருட்டு பிடிப்பது போலவும், பக்கத்தில் ஆரவ் நின்றுகொண்டிருப்பது போலவும் படத்துக்கான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ்-ல் ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்து சிக்கிக்கொண்டு சீக்கி அடித்த நடிகர் ஆரவ் இந்த படத்தில் ரயில்வே கான்டிராக்டராக நடிக்கிறார். பெரம்பூர் ரயில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் லோகோ ஒர்க்ஸைச் சுற்றி நடக்கும் கதை என்பதால், படம், பெரம்பூரைச் சுற்றியே படமாக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட படத்தின் என்பது சதவீத படபிடிப்புகள் முடிந்து விட்டன.

இந்நிலையில், படத்தின் நாயகன் நடிகர் ஆரவ்-ன் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில், மதுபாட்டில்களை ஒரு கிரீடம் போலஅணிந்து கொண்டிருக்கிறார் ஆரவ். இதனை பார்த்த ரசிகர்கள் இது தான் தலைக்கேறிய போதையா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.