கனடாவை சேர்ந்தவர் நோரா ஃபதேஹி. பாகுபலி, கார்த்தியின் தோழா ஆகிய
படங்களில் குத்தாட்டம் போட்டுள்ள இவர் தற்சமயம் மும்பையில் தங்கி பாலிவுட்
உள்பட இந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வித்தியாசமாக ஏதோ ஒன்று
நடக்கவுள்ளதாக பதிவிட்டு, ரசிகை ஒருவர் செல்ஃபி எடுக்க ஓடி வர நோராவோ
தன்னுடன் தான் எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்த்து ஏமாறும் வீடியோ ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
ஆனால் நோரா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சொல்லி வைத்து எடுத்தது போன்று உள்ளதாக கூறி வருகின்றனர்.


