விஜய்க்கு புதிய பட்டம் கொடுத்த "மேயாத மான்" இந்துஜா.!

விஜய்யை இளையதளபதி என எல்லோரும் அழைத்து வந்த காலம் போய் தற்போது பலரும் தளபதி என்றே அழைக்கிறார்கள். அவரை கொண்டாடும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

வயது ஏறினாலும் அவர் இளமையாகிக்கொண்டிருக்கிறார் என்றே பலரும் கூறி வருகிறார்கள். அவர் தற்போது விஜய் 63 படத்தில் கால்பந்து கோச்சாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் மேயாத மான் பட புகழ் தங்கச்சி இந்துஜாவும் நடிக்கவுள்ளார். மே 1 ல் அவர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் மக்கள் ஸ்டாரை இன்று சந்திக்கிறேன். எப்போதும் உற்சாகமும் அன்பும். ஊக்கத்தில் கிங் தளபதி விஜய் என கூறியுள்ளார்.