விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம்
பிரபலமானவர் கேப்ரெல்லா. நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த
ஐரா படத்திலும் நடித்திருந்தார்.
மேலும் டிக்டாக்கிலும் அவ்வப்போது
கருத்தான வீடியோக்களை வெளியிடும் இவரை நெட்டிசன்கள் கறுப்பழகி என்று
அழைப்பர். இந்நிலையில் இவர் தனது நீண்டநாள் காதலரான ஒளிப்பதிவாளர் ஆகாஷ்
என்பவரை கரம் பிடிக்கவுள்ளார்.
இதுகுறித்து கேப்ரெல்லா கூறுகையில்,
ஒரே தொழிலில் இருந்து, ஒத்த எண்ணம் கொண்ட இருவரால்தான் ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ள முடியும். நல்லது; கெட்டது என எல்லாவற்றையும் ஒளிவு
மறைவின்றி என்னிடம் சொல்வார். இருவரும் காதலை பரிமாறினோம்.
வீட்டுக்குச்
சொல்ல வேண்டுமே... நானே, அவருடைய அப்பாவுக்கு போன் செய்து, ஆகாஷ் மீதான
எனது காதலையும்; என் மீதான அவர் காதலையும் சொன்னேன். நிச்சயதார்த்தம்
முடிந்துள்ளது. ஜனவரியில் திருமணம் என்றார்.


