கடற்கரையில் பிகினி உடையில் கவர்ச்சி செல்ஃபி - இளசுகளை கிறங்கடித்த நடிகை நிகிஷா படேல்..!

குஜராத்தி பொண்ணு நிகிஷா படேல். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு தலைவன், கரையோரம், நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களில் நடித்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எழில் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

நிகிஷா படேலுக்கு மும்பை மருத்துவமனை ஒன்றில் ரகசிய ஆபரேஷன் நடந்தாக கூறப்பட்டது. இப்போது அதனை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: எனக்கு சிறிய ஆபரேஷன் நடந்தது, இதற்காக சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். அதனால் சோஷியல் மீடியாக்களிலிருந்தும் விலகி இருந்தேன். இப்போது நான் நார்மலாகிவிட்டேன்.

எழில் இயக்கும் படத்தில் நடித்து முடித்து விட்டேன். அடுத்து புதிய படங்களுடன் உங்களை சந்திப்பேன் என்று எழுதியிருக்கிறார். என்ன விதமான ஆபஷேன் என்பதை நிகிதா தெரிவிக்கவில்லை.

இதனுடன், கடற்கரையில் பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி செல்ஃபிக்களையும் வெளியிட்டுள்ளார் அம்மணி.




Previous Post Next Post
--Advertisement--