தூத்துக்குடி : ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் உதவி ஆய்வாளர் அருள்மொழி ஸ்ரீ மற்றும் அதே நிலையத்தைச் சேர்ந்த தனிப்பிரிவு காவலர் விக்னேஷ் இடையே தகாத உறவு இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டப்பிடாரம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் அருள்மொழி ஸ்ரீயின் கணவர் சதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது மனைவியின் செல்போனை பார்த்தபோது, விக்னேஷ் அனுப்பிய ஆபாச மெசேஜ்கள் மற்றும் ஆடை எதுவும் இல்லாமல் தனிமையில் இருக்கும் கண் கூசும் கன்றாவி காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் சதீஷ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், அருள்மொழி ஸ்ரீ மற்றும் விக்னேஷ் இடையே ஒரு வருடத்திற்கு மேலாக தகாத உறவு இருந்தது உறுதி செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அருள்மொழி ஸ்ரீயை சூரங்குடி காவல் நிலையத்திற்கும், விக்னேஷை மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விக்னேஷின் பழைய புகார்கள்
விக்னேஷ் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்டத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார். முன்பு பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றியபோது, பெண்கள் மற்றும் பெண் காவலர்களிடம் தகாத உறவு வைத்ததாகவும், மிரட்டியதாகவும் புகார்கள் வந்துள்ளன.
இதனால் பலமுறை பணியிட மாற்றம் செய்யப்பட்டும், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தொடர்ந்து தனிப்பிரிவிலேயே பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய இருவரும் தகாத உறவில் ஈடுபட்டிருந்தும், அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படாமல் வெறும் பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருப்பது குறித்து பொதுமக்கள் மற்றும் காவல்துறை வட்டாரங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
விக்னேஷ் இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க சில அரசியல் பிரமுகர்களை அணுகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் காவல்துறையின் ஒழுக்கம் மற்றும் ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
Summary : In Thoothukudi district, a female assistant inspector and a male special branch constable from Ottapidaram police station were transferred to different stations after the inspector’s husband filed a complaint regarding their personal association. The constable had faced similar complaints in the past and received multiple transfers earlier.