என்ன கன்றாவி இது..? - சகுனி பட நடிகை ப்ரணிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கடுப்பான ரசிகர்கள்..!

'உதயன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. நடிகர் கார்த்தியுடன் 'சகுனி' படத்தில் நடித்ததன் மூலமாகப் பிரபலமான இவர், 'மாஸ்' படத்தில் நடிகர் சூர்யாவுடனும், 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தில் அதர்வாவுடனும் நடித்தார். 


கன்னட மற்றும் தெலுங்கில் அதிக படங்கள் நடித்திருக்கும் இவர், தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் அம்மணிக்கு விளம்பர பட வாய்ப்புகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.

இடைப்பட்ட நேரத்தில் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப அம்மணி விதவிதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அவற்றை தனது சமூக வளைத்தள பக்கங்களில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

அந்த வகையில், சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்கு மஞ்சள் நிற உதட்டு சாயம் பூசிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் ப்ரணிதா. இதனை பார்த்து கடுப்பான ரசிகர்கள், என்ன கன்றாவி இது.? என கமெண்டுகளில் கழுவி ஊத்தி வருகிறார்கள்.