உடலுறவின் போது பெண்கள் எளிதில் உச்சகட்டம் அடைய ஆண்களுக்கு இந்த ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கணும்..

உடலுறவின் போது ஆண்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பாலியல் மருத்துவர் டாக்டர் பிரியா ரங்கநாதன் அறிவுறுத்துகிறார்.

அதில் பெண்கள் எளிதில் உச்சம் அடைய ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை பற்றி கூறியுள்ளார். அதை இந்த பதிவில் பார்க்கலாம்,

அவர் கூறியதாவது, உடலுறவின் போது “உங்கள் துணையை முழுமையாக தயார்படுத்தாமல், நேரடியாக உறவில் ஈடுபட முயற்சி செய்வது மிகவும் தவறு. துணை அதற்கு உடல்ரீதியாக தயாராக இல்லாதபோது, அவரது உறுப்பில் இயற்கையான ஈரப்பதம் (லூப்ரிகேஷன்) இருக்காது.

அந்த நிலையில் வலுக்கட்டாயமாக முயற்சி செய்தால், அவருக்கு கடுமையான வலி ஏற்படலாம். சில சமயங்களில் மென்மையான திசுக்களில் சிறிய காயங்களும் உண்டாக வாய்ப்பு உள்ளது.எனவே, உறவுக்கு முன்பு போதுமான முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது அவசியம். உங்கள் துணையின் உடல் முழுவதும் தூண்டப்பட்டு, அவர் முழுமையாக தயாராகி, அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள் என்ற சிக்னல் கொடுக்கும் வரை அவசரப்படாமல் துணையை தயார் படுத்த வேண்டும்.

அவர் தானாக முன்வந்து அடுத்த கட்டத்திற்கு தயாராக இருப்பதாக உணர்த்தும் வரை அமைதியாக இருப்பது முக்கியம். அந்த சிக்னல் வெறும் ம்ம்.. என்ற வார்த்தையாக கூட இருக்கலாம்.

இப்படி உங்கள் துணையின் உடலும், மனமும் தயாராக இருக்கும் போது நீங்கள் இயங்க ஆரம்பித்தால் எளிதில் உச்சநிலைக்கு செல்வார்.

மேலும், உங்கள் துணை உச்சகட்டத்தை அடைவதற்கு முன்பாக நீங்கள் உச்சநிலைக்கு சென்றுவிட்டால், தொடர்ந்து உறவில் ஈடுபடுவது ஆண்களுக்கு பெரும்பாலும் கடினமாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் உங்கள் துணைக்கு உச்சகட்ட அனுபவம் கிடைப்பது குறைவாகிவிடும்.

ஆகையால், உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் மற்றும் மனம் முழுமையாக தயாராகி, அவரது அனுமதி மற்றும் விருப்பத்துடன் மட்டுமே அடுத்தகட்ட உறவில் ஈடுபடுங்கள். அதுவரை, மசாஜ் செய்து விடுவது, மிருதுவாக விளையாடுவது, அவரது விருப்பங்களை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வது என முன் விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

இது இருவருக்கும் இனிமையான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை உருவாக்கும்” என்று டாக்டர் பிரியா ரங்கநாதன் கூறுகிறார்.இந்த அணுகுமுறை இரு தரப்பினருக்கும் மரியாதை மற்றும் புரிதலை வலியுறுத்துகிறது. ஆலோசானைக்கு வரக்கூடிய பல தம்பதியினர் தன்னிடம் கூறும் பிரதான பிரச்சனைகளில் ஒன்றாக இது இருக்கிறது.

கணவன், மனைவி இருவரும் மிக நெருக்கமாக நண்பர்கள் போல ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால், தாம்பத்ய விஷயத்தில் புரிதல் இல்லாமல், மனைவி உடல் ரீதியாக தயாராவதற்கு முன்பே உறவில் வேகமாக ஈடுபட்டு உடல் சக்தியை விரைவாக இழந்து விடுகிறார்கள் பல கணவர்கள்.

இதனால், மனைவிகளுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனை, கணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை என பல பிரச்சனைகள் உருவாகி விடுகின்றது. இப்படியானவர்களுக்கு இந்த ஆலோசனை புதிய வாழ்க்கை அனுபவத்தையும், அவர்களின் துணைக்கு மகிழ்ச்சியான தாம்பத்யத்தையும்கொடுக்கும்.

Summary in English : Partners should never rush into next stage without proper preparation. Wait for clear signals that the partner is fully ready. Mutual consent and patience ensure both reach final stage comfortably.