என்னை இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடியுங்கள் என பல இயக்குனர்கள் கேட்கிறார்கள் - சோனியா அகர்வால் வேதனை..!


நடிகை சோனியா அகர்வால் நடித்த காதல் கொண்டேன் போன்ற படங்கள் பெரிய ஹிட். ஆனால் அந்த படங்கள் A சர்டிபிகேட் வாங்கிய படங்கள் என்பதால் தற்போது அவருக்கு ஒரு சிக்கல் வந்துள்ளது.

சோனியா அகர்வால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'தனிமை' என்ற படத்திற்கு தியேட்டர்களே கிடைக்கவில்லையாம். யு சர்டிபிகேட் வாங்கிய படத்தினை A சர்டிபிகேட் என சிலர் தவறாக செய்தியை பரப்பி விட்டுள்ளனர். 

நான் இதற்குமுன் நடித்த படங்கள் அப்படி இருந்ததால் தற்போது இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிட்டு என் படத்திற்கு தியேட்டரே கிடைக்காமல் செய்துவிட்டனர் என நடிகை ஒரு பேட்டியில் கோபமாக பேசியுள்ளார்.

மேலும் ”என்னை 35 வயது நடிகருக்கு அம்மாவாக நடியுங்கள் என பல இயக்குனர்கள் தேடி வருகிறார்கள். நான் என் வயதுக்கு மீறிய கதாப்பாத்திரத்தில் நடிக்கமாட்டேன்” என நிராகரித்துவருவதாக தெரிவித்துள்ளார்.