குடிபோதையில் கார் ஒட்டிய முகமூடி பட நடிகை பூஜா ஹெக்டே..? - மேனேஜர் விளக்கம்


தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கும் மகரிஷி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே.

தமிழிலும் ஜீவாவின் முகமூடி படத்தில் நடித்திருந்த பூஜா மிக அதிகமான குடிபோதையில் கார் ஓட்டி ஹோட்டலுக்கு சென்ற வழியில் போலீசாரிடம் சிக்கினார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு தீயாக பரவியது.

மேலும் அவரை, அவரின் மேனேஜர் ஹரி வேறு ஒரு காரில் ஏற்றி ஹோட்டலுக்கு அனுப்பி வைத்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஹரி, பூஜா பற்றி வெளியான தகவலில் உண்மை இல்லை. தனக்கு பழக்கம் இல்லாத ஹைதராபாத் நகரில் அவர் ஏன் கார் ஓட்டப் போகிறார்?. 

அவருக்கு இரவு 12.20 மணிக்கு ஃபிளைட் என்பதால் அவரை விமான நிலையத்தில் இறக்கிவிடுமாறு கூறி படத் தயாரிப்பு குழு காருடன் டிரைவரை அனுப்பியது என்கிறார்.