காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தவர் நடிகை அதிதி ராவ். ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக உள்ளார்.
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களையும் பதிவேற்றுவார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கூகுள் தேடலில் தன்னைப் பற்றிய விஷயங்களை தேடுவதை நிறுத்திவிட்டதாக கூறியிருக்கிறார் அதிதி.
"சினிமாவில் அறிமுகமான சமயத்தில் என்னைப்பற்றி கூகுளில் தேடிய போது, நான் நடித்த முதல்படத்தின் கவர்ச்சியான, ஆபாச படங்கள் வந்ததை பார்த்து அதிர்ச்சியானேன். அப்போது இருந்தே, என்னை பற்றி கூகுள் செய்வதை நிறுத்திவிட்டேன்" என கூறியிருக்கிறார்.


