அம்மாடியோவ்..! - அயர்ன் மேன் டோனி ஸ்டார்க்-ன் சம்பளம் இத்தனை கோடியா..?

2008ல் வெளிவந்த 'அயர்ன் மேன்' படத்தில் நாயகனாக நடித்தவர் ராபர்ட் டௌனி ஜுனியர். 54 வயதான ராபர்ட்டின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி' வார் படத்தின் மூலம் அவருக்கு 75 மில்லியன் யுஎஸ் டாலர் சம்பளமாகக் கிடைத்திருக்கிறது. அந்தப் படம் 2 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தது.

2017ல் வெளிவந்த 'ஸ்பைடர்மேன் - ஹோம்கம்மிங்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததற்காக மட்டும் அவர் நாள் ஒன்றுக்கு 5 மில்லியன் யுஎஸ் டாலர் சம்பளமாக வாங்கியுள்ளார். அப்படத்திற்காக 3 நாட்கள் அவர் நடித்துக் கொடுத்தாராம்.

'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம் இதுவரையிலும் 1.2 பில்லியன் யுஎஸ் டாலர் தொகையை வசூலித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு 'அவெஞ்சர்ஸ்' படங்களில் நடிப்பதற்காக ராபர்ட் டௌனி ஜுனியர் லாபத்தில் 2.5 சதவீதம் வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டாராம். அதன்படி, கடந்த ஆண்டு வெளிவந்த 'இன்பினிட்டி வார்' படம் மூலம் அவருக்கு கிடைத்த தொகை இந்திய ரூபாயில் 520 கோடியாம். இப்போது 'எண்ட்கேம்' வசூல் மூலமும் அவருக்கு அதைவிட அதிகத் தொகை கிடைக்கும் என்கிறார்கள்.