ஐஸ் நடிகைக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்ட பிரபல நடிகர்..!

தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஐஸ் ஆன நடிகையை வைத்து ஹீரோயின் சப்ஜெக்ட் படம் ஒன்றை தயாரிக்கிறார். இந்தப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க முன்னணி நடிகரை அணுகினாராம் தயாரிப்பாளர்.

ஆனால், நடிகரை "அடுத்த 2 வருஷத்துக்கு கால்ஷீட் இல்லை, இனி கெஸ்ட்ரோல் பண்றதில்லேன்னு முடிவெடுத்திருக்கேன்"னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாராம்.

விஷயத்தை கேள்விப்பட்ட நடிகை, நடிகருக்கு போன் பண்ணி "இது என்னோட படம். படத்தில் எனக்கொரு பிரேக் கிடைக்கும். எனக்காக நீங்க நடிச்சு கொடுக்கணும்" என்றாராம்.

அடுத்த நிமிடமே தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் கொஞ்சம் அட்ஜட் பண்ணிக்க சொல்லி 10 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் நடிகர்.